ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம் – Andavaril Nam Ahamagilvom

Deal Score-1
Deal Score-1

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம் – Andavaril Nam Ahamagilvom

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்
அனைவருமே வருவீரே
நம் மீட்பின் அரணாகும்
அவரில் நாம் களித்திடுவோம்

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்
அனைவருமே வருவீரே

புகழ் பாடி அவர் திருமுன்
சென்றிடுவோம் வாருங்கள்
புகழ் பாடி அவர் திருமுன்
சென்றிடுவோம் வாருங்கள்
பாடல்கள் இசைத்து அவர்
முன்னிலையில் மகிழ்த்திடுவோம்

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்
அனைவருமே வருவீரே

கடலெல்லாம் அவர்க்குரிமை
செய்தவரும் அவரன்றோ
பாரெல்லாம் அவர்க்குரிமை
மாந்தரே நீர் அறிந்திடுவீர்

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்
அனைவருமே வருவீரே

அனைத்திற்கும் உருவளித்து
தந்தனவே அவர் கைகள்
அனைத்திற்கும் உருவளித்து
தந்தனவே அவர் கைகள்
நம்மையே படைத்தவரை
வந்திடுவீர் வணங்கிடுவோம்

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்
அனைவருமே வருவீரே
நம் மீட்பின் அரணாகும்
அவரில் நாம் களித்திடுவோம்

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்
அனைவருமே வருவீரே

Jeba
      Tamil Christians songs book
      Logo