அலை மோதும் ஆழ்க்கடலில் – Alai Mothum Aalkadalil
அலை மோதும் ஆழ்க்கடலில்
அடியேன் நான் ஓர்சிறுக்கப்பல்
ஆண்டவரே வாருமையா
என் கப்பலில் நீர் மாலுமியாய்
1. நான்கு திசைகளில் நான் செல்லும் திசையை
நான் அறியேனே இயேசுவே
நீர் எந்தன் கப்பலில் நித்தமும் இருந்தால்
நிச்சயம் சேர்வேன் நான் அக்கரையில் சென்று
நித்தமும் தேவனைப் பாடிடுவேன் (2)
2. சிறுபழுதொன்றும் என்னில் வராமல்
தினந்தோறும் என்னைக் காத்திடும்
ஒருப் பொழுதும் உம் அன்பை விடாமல்
அன்பினையே எண்ணி துன்பங்களைத் தள்ளி
விண்ணுலகை எண்ணி ஓடிடுவேன் (2)
3. கண்ணீர் நிறைந்த காரிருள் பாதையில்
கரம்பிடித்தென்னை நடத்திடுமே
பெரும்புயல் வரினும் அரும் துணை நீரே
தீரும் என் சுயபலம் தாரும் உம் படைபலம்
சேரும் உம் அடைக்கலம் என்றென்றுமே (2)