அலைகடலோரம் கலங்கரையாய் – Alaikadaloram Kalangaraiyaai song lyrics
அலைகடலோரம் கலங்கரையாய் – Alaikadaloram Kalangaraiyaai song lyrics
அலைகடலோரம் கலங்கரையாய் வீற்றிருக்கும்
லூர்து தாயே
இருதயபுரம் வாழ் மாந்தரின் நெஞ்சில்
சுடரும் பேரொளியே
நீர் வாழ்க தாய்மரியே
நல்கருணை வடிவம் நீயே
அன்னையே லூர்து தாயே
உம்நாமம் வாழியவே
எங்கள் குறைகளையே
நிதம் தீர்க்கும் கலங்கரையே
நீர் வாழ்க எம் தாயே
நல்கருணை வடிவம் நீயே
வாழ்க லூர்து மாமரியே
எம் பாதுகாவலும் நீயே
பேரளைசூழ் தருணத்திலே
பேரன்பு தந்து காத்தவளே
அடியோர் எங்கள் கூக்குரல் கேட்டு
அரவணைத்த எம் மாதவளே
அளவில்லாத உம் தயவினைக்கண்டு
சரணடைகின்றோம் தாயே
சுமையாவும் தொனித்தோமே
அம்மா உந்தன் சந்நிதியில்
வாழ்க லூர்து மாமரியே
எம் பாதுகாவலும் நீயே
உம்மையே நம்பி வருகின்றோம்
உத்தம தாயே மாமரியே
ஒருபுரமாக ஜெபிக்கின்றோம்
உம்மருள் பாத நிழலினிலே
அன்னையே உம்மை பற்றிடுவேன்
வெற்றியை நாளும் பெற்றிடுவேன்
உமையன்றி துணையேது
பாpவுடன் எம்மை ஏற்பாயே
வாழ்க லூர்து மாமரியே
எம் பாதுகாவலும் நீயே
அன்னையே லூர்து தாயே உம்நாமம் வாழியவே – ANNAIYE LOURDU THAYE