அதிகாலை நேரம் – ATHIKALAI NERAM
அதிகாலை நேரம்
என் மனம்பாடும் கீதம்
பாடுவேன் நேசரைப் பாடுவேன்
நான் பாடும் பாடல் கேட்டு
எந்தன் நேசர் மகிழுவார்
1.வண்ண வண்ண பூக்களும் வாழ்த்தி பாடுதே
சின்ன வண்டினமும் காதிலே கானம் பாடுதே
எண்ணில்லா நன்மைகள் எந்தன் வாழ்வில் செய்தாரே
என்னை தம் பிள்ளையாய் நேசர் ஏற்றுக்கொண்டாரே
எண்ணியே நானும் பாடுவேன் என் நாவினால் அவரே போற்றுவேன்
2.பறவைகளும் வானிலே பாட்டுபாடுதே
எந்தன் மனமும்கூட வானிலே பறந்து செல்லுதே
ஆலயம் செல்லுவேன் இயேசுவை நான் போற்றுவேன்
ஆயிரம் ஆயிரம் ஸ்தோத்திரங்கள் கூறுவேன்
நேசரின் பாதம் பணிந்து ஆசைகள் யாவும் கூறுவேன்