மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan

மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan

மோசேயின் தேவன் எந்தன் துணையானார்…
பார்வோனின் சேனைகள் என்னை என்ன தான் செய்யும்?…
முடிவு பரியந்தம் நடத்தும் ஒரு தெய்வம்…
பிரளயம் வந்தாலும் நான் அஞ்சிடுவேனோ?…
அவர் கோலும் அவர் தடியும் என்னை தேற்றும்…
நிலையில்லாத வாழ்வினில் இருளை போக்கும்…
இனி எந்தன் உயிரே, எங்கும், எதிலும் அவர், அவர், அவர் என வாழும்…

1) தேவனின் வாஞ்சையெல்லாம் அவர் நம்மோடிருப்பது தான்…
ஒருபோதும் நான் அகல மாட்டேன்…
கைகோர்த்து அவர் கூட நடப்பேன்…
லோகத்தின் ரோகம், தாபம், வரும் துன்பங்கள் எல்லாம்…
மோட்சத்தில் சேர்த்திடும் படிகற்கள் தான்…
மோசேயை நோக்கி ஜனங்கள் ஏன் முறுமுறுத்தார்கள்…?
வழிநடத்தும் தேவன்பை உணராமல் தான்…
தேவனை நம்பியே நடப்போம், என்றுமே…என்றுமே…

2) நான் வாழும் நாட்களெல்லாம் அவரன்பில் தான் மகிழ்வேன்…
ஒருபோதும் தெவிட்டாத அன்பு,
இயேசுவின் பரிசுத்த அன்பு…
நம் வாழ்வின் சொந்தம் ஒன்றும் என்றும் நிரந்தரமில்லை…
இயேசுவின் அன்பு ஒன்றே நிச்சயம்…
இவ்வாழ்வில் யாரும் நிலைத்திங்கு நிற்பதுமில்லை…
மோட்சமோ நரகமோ, அது நித்தியம்…
இயேசுவின் பாதத்தினண்டை, மோட்சமே… மோட்சமே