நீர் விலகவில்லையே – NEER VILAGAVILLAIYE
நீர் விலகவில்லையே
என்னை விடவும் இல்லையே – 2
உம் திருக்கரத்தாலே
என்னை தூக்கி விட்டீரே
(என்னை தொடர்ந்து பிடித்தீரே) – 2
என் முழுவதும் இயேசுவே
என் எல்லாம் இயேசுவே
என் வாழ்வின் நோக்கமும் (அர்த்தமும்) இயேசுவே – 2
1. வனாந்திரம் என் முன்னே வழிகளை அடைத்ததே
எதிர்காலம் என் முன்னே கேள்வியாய் நின்றதே – 2
என்னை கொன்றாலும் உம்மைத்தான் நம்புவேன்
என்ற உறுதியை நீர் எனக்குள்ளே வைத்தீரே – 2
2. சோர்ந்திடும் நேரத்தில் கரம் கொண்டு தாங்கியே
திடன் தந்து என்னையும் தொடர்ந்திட செய்தீரே – 2
என்னை பொன்னாக விளங்கிட செய்திட்டீர்
இன்னும் அதிகமாய் நான் ஜொலித்திட செய்திட்டீர் – 2
3. வாக்குகள் தந்தென்னை வழிநடத்தி வந்தவர்
தடம் மாறி போகாமல் இதுவரை காத்தவர் – 2
என் கரம் பிடித்தவர் உண்மையுள்ளவர்
என் உயிர் பிரியும்வரை என்னை காப்பவர் – 2