ஏழைப்பிள்ளை ஆயினும் – Yealai Pillai Aayinum

ஏழைப்பிள்ளை ஆயினும் – Yealai Pillai Aayinum

1.ஏழைப்பிள்ளை ஆயினும்
கர்த்தர் ஊனுடைகளும்
தந்து என்னைக் காக்கிறார்,
என்னில் நேசம் வைக்கிறார்.

2.நித்திரை விழிப்பிலும்
வேலை செய்யும் போதிலும்
யேசு கூட இருப்பார்,
என்னை நித்தமும் காப்பார்.

3.வானம் ஆளும் ஆண்டவர்
என்னைப் போல பாலகன்
ஆகி, நீதி செய்யவே
ஏழை ரூபெடுத்தாரே.

4.கூடு உண்டு பட்சிக்கு
குழி உண்டு நரிக்கு,
தலை சாய்க்கத் தமக்கே
இடம் இல்லை என்றாரே.

5.இங்கிருக்கு மட்டவர்
என்னை ஆசீர்வதிப்பார்
ஜீவன் போகும் நேரத்தில்,
சேர்த்தக் கொள்வார் மோட்சத்தில்.

Yealai Pillai Aayinum song lyrics in English

1.Yealai Pillai Aayinum
Karthar Oonudaikalum
Thanthu Ennai Kaakkiraar
Ennil Neasam Vaikiraar

2.Niththirai Vilippilum
Vealai Seiyum Pothilum
Yesu Kooda Iruppaar
Ennai Niththamum Kappaar

3.Vaanam Aalum Aandavar
Ennai Pola Paalagan
Aagi Neethi Seiyavae
Yealai Roobeduththarae

4.Koodu Undu Paravaikku
Kuli Undu Narikku
Thalai Saaikka Thamakkae
Idam Illai Entrarae

5.Enkirukkum Mattavar
Ennai Aaseervaththipaar
Jeevan Pogum Nearththil
Searthu Kolvaar Motchaththil