ஆர் இடத்தில் ஏகுவேன் நான் – Aar Idaththil Yeaguvean Naan
பல்லவி
ஆர் இடத்தில் ஏகுவேன் நான்?
ஆதரி, ஐயா?
அனுபல்லவி
தாரகமாய் நீசர் உற்ற சாபம் மாற்றிட வந்த சகாயா,
சரணங்கள்
1.அலகை மடங் கவடித் தோட்டின ஜெய கிறிஸ்
தையனே, உனை நம்பினேன்;
மலைவுகொள்ளும் எனக்குன் பாதமே கதி அல்லால்,
மற்றொரு துணை இலையே, பரனே இனி
2.அணுக ஈனரை வரவழைக்கும் மனோகரா,
அடியனை அரவணைத்தாள்;
பணிவுடன் உனதடி சேர்ந்து, சரண் புகுந்த
பாவியை நீ கைவிடாமல், அனுக்ரகி
3.முடிவு வரை நடத்தி ஆண்டு ரட்சிக்க எனை
முழுதுமே கை அளித்தேன்;
அடிதொறும் பலவினை சூழ்ந்திடும் பொழுதெல்லாம்
ஆதரிப்பதுனது மேல் உற்ற பாரமே.
Aar Idaththil Yeaguvean Naan song lyrics in English
Aar Idaththil Yeaguvean Naan
Aathari Aiya
Thaaragamaai Neesar Uttra Saabam Maattrida Vantha Sahayaa
1.Alagai Madankavadi Thottina Jeya Kiristhaiyanae
Uani Namninean
Malaivu Kollum Enakkun Paathagamae Kathi Allaal
Mattroru Thunai Illaiyae Paranae ini
2.Anuga Eenarai Varavalaikkum Manohara
Adiyeanai Aravanaithaal
Panivudan Unathadi Searnthu Saran puguntha
Paaviyai Nee Kaividamal Anukragi
3.Mudivu Varai Nadaththi Aandu Ratchikka Enai
Muluthumae Kai Alithean
Adithorum Palavinai Soozhnthidum Poluthellaam
Aatharipathunathu Mael Uttra Paarame.