அறையப்பட்ட யேசு உன் மீட்பர் – Araiyapatta Yesu Un Meetpar

அறையப்பட்ட யேசு உன் மீட்பர் – Araiyapatta Yesu Un Meetpar

1.அறையப்பட்ட யேசு உன் மீட்பர் பாராய்!
ஜீவன் இச்சணமே அளிப்பார்;
ஓ! பார், பாவி, பார், நீ மீட்கப்படுவாய்!
சிலுவை அறையுண்டவரால்.

பார், பார், ஜீவிப்பாய்,
சிலுவையில் மீட்பரைப்
பார்த்து பெற்றிடுவாய்
உனக்கே ஜீவன், இச்சணமே.

2.அங்கேன் தொங்கினார், பாவஞ்சுமந்தோராய்?
மானிடர் குற்றந் தீர்க்கத்தானே!
பக்கத்தில் ரத்தம் பாய்ந்து வடிந்ததாறாய்,
பாவம் தீர்ந்தது சாவால் தானே!

3.செய்யவேண்டியதெல்லாம் இதோ முடித்தார்;
சந்தேகம் இனி அடைவதேன்?
முடிவாம் காலத்தில் ஓர் முறை வருவார்
ஆரம்பித்ததைப் பூர்த்தி செய்வார்.

Araiyapatta Yesu Un Meetpar song lyrics in English

1.Araiyapatta Yesu Un Meetpar Paaraai
Jeevan Etchanamae Alippaar
Oh Paar Paavi Paar Nee Meetkapaduvaai
Siluvai Araiyundavaraal

Paar Paar Jeevippaai
Siluvaiyil Meetparaai
Paarthu Pettriduvaai
Unakkae Jeevan Etchanamae

2.Angean Thonginaar Paavam Sumanthoraai
Maanidar Kuttram Theerkkththanae
Pakkaththil Raththam Paainthu Vadinthathaaraai
Paavam Theernthu Saavaal Thaanae

3.Seiya Vendiyathellaam Itho Mudithaar
Santhegam Ini Adaivathean
Mudivaam Kaalaththil Oor Murai Varuvaar
Aarambiththathai Poorthi Seithaar.