Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
வார்த்தையிலே உண்மை உள்ளவரே -2
மலைகள் விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் வார்த்தை மாறாதையா -2
ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்தீர்
ஜாதிகளின் தகப்பனாக உயர்த்தி வைத்தீர் -2
வானத்தின் நட்சத்திரம் போல் பெருக செய்தீரே
சொன்னதை செய்து நிறைவேற்றினீர் -2-மலைகள் விலகி
முட்செடி நடுவில் தோன்றினீரையா
மோசேயை அழைத்து பேசினீரையா -2
சிவந்த சமுத்திரம் பிளக்க செய்தீரே
வனாந்திரங்களை வயல் நிலமாய் மாற்றினீர் -2 -மலைகள் விலகி
Malaigal Vilagi Ponaalum Tamil Christian song lyrics