Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும்

Deal Score0
Deal Score0

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும்

ஆயிரமாயிரம் தலைமுறை உம்மைப் பணிந்து துதிக்கும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்
பரிசுத்தவான்களனைவரும் விசுவாசிப்போர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

உம் நாமம் மிக உயர்ந்தது உம் நாமம் மிகப் பெரியது உம் நாமம் மேலானது
சிங்காசனம், கர்த்தத்துவம் அதிகாரம், வல்லமையிலும் உம் நாமம் மேலானது

மன்னிக்கப்பட்டோர் யாவரும் மீட்கப்பட்டோரனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்
விடுதலையானோர் யாவரும் இயேசு நாமம் தரித்தோர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

தூதர் பாடும் தூயரே சர்வ சிருஷ்டி போற்றும் தூயரே உம்மை உயர்த்திடுவேன் தூயரே தூயர் நீர் என்றும்
பரிசுத்தர் பாடும் தூயரே இராஜாதி இராஜா தூயரே நீர் என்றென்றும் தூயரே தூயர் நீர் என்றும்.

Jeba
      Tamil Christians songs book
      Logo