காற்று வீசிடும்
திசை எதுவென்று அறியேன்
எங்கு செல்லுமோ
அதையும் நான் அறியேன்
தென்றலாய் வீசையில்
குளிர்ந்திடும் உலகம்
மென்மையாய் இதமாய்
மாறிடும் யாவும் (யாவும் மாறும்)
தூய ஆவியே, ஆவியே
மென்மையான ஆவியே
தூய ஆவியே, ஆவியே
தென்றலாக வீசும் என்னிலே
நீர் தங்கும் ஆலயமாய்
என்னை மாற்ற அர்ப்பணித்தேன்
ஏற்று என்னை நடத்தும்
அபிஷேகத்தால் என்னை நிறைத்துவிடும்
பரிசுத்தமாக்கிடுமே (2)
– தூய ஆவியே
பெலன் ஒன்றும் இல்லை என்னில்
பெலன் தந்து தாங்கும் என்னை
வல்லமையின் ஆவியே
பூமியின் எல்லைகள் எங்கிலும்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2)
– தூய ஆவியே