கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum
கல்லும் கரைந்தீடும்
கல்வாரி உருகீடும்
கர்த்தரின் திருமுகத்தை பார்த்து
கண்ணீர் சொரியூதந்த காற்று
அன்பிற்கு அரிச்சுவடாய்
ஆறுதலின் ஆதாரமாய்
வந்துதித்த நல்மணியே
வல்லபிதா கண்மணியே
(கல்லும் கரைந்தீடும்)
வாரடி எதற்காக
முள்முடி நமக்காக
செந்நீரை மண் மீதே
தண்ணீர் போல் சிந்தீனாரே
(கல்லும் கரைந்தீடும்)
சிலுவையின் பாரத்தில்
தெரியுது மெய்யன்பு
சிந்திய இரத்தத்தாலே
சிறந்ததே நம்வாழ்வே
(கல்லும் கரைந்தீடும்)
தண்டனைக்கு அகப்பட்டு
நம் ஜீவன் மீட்டாரே
தப்பியே பிழைத்தோமே
நாம் அதை சிந்தீப்போமே
(கல்லும் கரைந்தீடும்)