கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo

பல்லவி

கண்டில்லையோ கவையில்லையோ
ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ
வையகமனைத்தும் அவர் சத்தம் பேச
உன்னையும் விரும்புகின்றார்

1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார்
வாலிபர் தெருவில் மூர்ச்சையானார்
வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று
வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ

2. அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால்
அடியவர் தானாய்த் திருந்திடுவார்
அறியாமை உலகை மூடுவதேன் – என்
பொறுப்பை நான் அறியாததே – கண்டில்லையோ

3. உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி
பரலோகத் தந்தை ஆணையிட்டார்
நினைப்பவர் யாரோ உழைப்பவர் எவரோ
உதவுவார் யார் யாரோ – கண்டில்லையோ

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks