ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un

பல்லவி

ஓடி வாராயோ நண்பா உன்
நேசர் அழைக்கிறார் இன்றே
இன்றே திரும்புவாய் கண்டு

சரணங்கள்

1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
குரலின் பெயரை அழைத்தே
தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடிவா

2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
காத்துக் கொள்வதும் அவர் கரம் – ஒன்றும்
இல்லாத் தூசி நம்மை
உயர்த்துவதும் அவர் கரம் – ஓடிவா

3. சீறும் புயலின் தீமை நின்றே
மறைத்து காப்பதும் அவர் கரம் – பாதை
மாறிய கால்களுக்குத்
தீபம் காட்டும் அவர் கரம் – ஓடிவா

4. உற்ற உறவும் கைவிட்டாலும்
உரிமை கொள்ளும் அவர் கரம் – உண்மை
அறிவும் சிறந்த ஞானமும்
ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடிவா

5. எங்கு பார்த்தாலும் காயம்தோய்ந்த
ஒளியின் கரங்கள் காணுதே – ஓடி
வந்து பலத்த மார்பில்
சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடிவா

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks