எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI


பல்லவி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள்
தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து

அனுபல்லவி

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப்

சரணங்கள்

1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப்

2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப்

3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் — எப்

4.வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் –எப்

5.தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை. மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி –எப்

6.துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் — எப்

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – Eppoadhum Naadhanai sthoathiri

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks