எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன்
எந்தன் மகிமையின் தேவனே எனக்கு செவிகொடுமே
எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன்
எந்தன் மகிமையின் தேவனே எனக்கு இரங்கிடுமே
1.பக்தியுள்ளவனை கர்த்தர் தெரிந்துகொண்டாரென்று
நீதிமான்களின் சத்தத்தை அவர் என்றும் கேட்பாரென்று
அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன்
எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்
2.உங்கள் இருதயத்தில் கர்த்தரோடு பேசுங்கள்
நீதியின் பலிகளை செலுத்துங்கள்
கர்த்தர் சமூகத்தில் அமர்ந்திருங்கள்
அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன்
எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்
3.உந்தன் முகத்தின் ஒளியை
எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணும்
எந்தன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றும்
அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன்
எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்
4.இரவும் பகலும் என்னை
சமாதானம் மூடிக்கொள்ளும்
கர்த்தர் நீர் ஒருவரே
என்னை சுகமாய் தங்கப்பண்ணுவீர்
அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன்
எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்
—————————————————————
9444609229