அப்பா! அப்பா! இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா – இந்த
உலகில் உம்மை விட்டா
வேறே யார் தான் துணையப்பா
ஆமென் என்றால் அல்லேலூயா பாடு – நீ
ஆனந்தத்தால் துள்ளி துள்ளி ஆடு
ஆமென் அல்லேலூயா
ஆமென் ஆமென் அல்லேலூயா
– அப்பா! அப்பா! இயேசப்பா
1. நீரே வழி என்றால் வழிகாட்டுவார்
நீரே ஜீவன் என்றால் ஜீவன் தருவார்
நீரில்லாமல் மீனும் இல்லே
நீ இல்லாமல் நானுமில்லே
உயிர்வாழ வழியுமில்லே
உம்மையன்றி மகிழ்ச்சிஇல்லே
– ஆமென் என்றால்
2. உலகத்தில் இருக்கின்ற அவனை விட என்
உள்ளத்தில் வாழ்பவர் பெரியவரே
காலங்கள் மாறினாலும் மாறாதவரே தன்
கண்ணுக்குள்ளே நம்மை வைத்துக் காப்பவரே
இயேசுவுக்குள் இன்பமுண்டு
இயேசுவுக்குள் அன்பு உண்டு
இயேசு என்று சொல்லும் போதே
எத்தனை எத்தனை மகிழ்ச்சி உண்டு
– ஆமென் என்றால்
3. காக்கையோடு கருங்குயில் பறக்கின்றது
காணும் போது ரெண்டும் ஒன்றாய் தெரிகின்றது
கானக்குயில் பாடும் சத்தம் இனிக்கின்றது
காக்கைவேறு குயில் வேறு பிரிக்கின்றது
உலகத்தில் தெய்வம் உண்டு எல்லாமும் தெய்வம் இல்லே
உண்மையான தெய்வம் இயேசு
ஒருவரைத் தவிர எவருமில்லை
– ஆமென் என்றால