Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்

இயேசு என் வாழ்வினல் இன்பம்
இகமதில் அவரைப் புகழுவேன் (2)

பாவங்கள் போக்கிடு நாமம்
பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்
அகமதிலே அருள் தனையே
அளிக்கும் அன்பு தேவன் – இயேசு

கண்ணீர் துடைத்திடும் கரங்கள்
காயம் ஏற்ற நல் கரங்கள்
கருணை மிகும் கரங்களையே
நீட்டி அழைக்கும் தேவன் – இயேசு

நன்மை செய்திங் கால்கள்
நல்லோரைத் தேடிடுங் கண்கள்
அளவில்லாத ஆசீர்களையே
அளிக்கும் நல்ல தேவன் – இயேசு

இயேச காட்டும் பாதை
இடறில்லா அன்பின் வழியே
ஜீவ வழி என்றவரே
ஜீவன் தந்த தேவன் – இயேசு

சிலுவையில் தொங்கும் மீட்பர்
சிறந்த வாழ்வின் பங்கு
சுதந்திரமே நல்கிடுவார்
சுகமாய் தங்கி வாழ்வேன் – இயேசு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks