ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum
பல்லவி
ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த்
தேவன் பாரினில் பிறந்தார்
அனுபல்லவி
நீச மகாஜன பாவப்பரிகார
நேச மனோகரனான மரிசுதன்
சரணங்கள்
1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே
பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்
ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென
சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக
2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க
அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க
தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட
தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – ஏக
3. விண்ணினில் ஜோதிகள் எண்ணிலா சேனைகள்
மண்ணினில் ஜாதி உயிர்த்திரள் போற்றிட
கண்ணினில் கண்ணொளியாகும் குமாரனாய்
அண்ணலாம் இயேசு அருணோதயமான – ஏக
4. அந்தரத்தில் தேவசுந்தர பாலகன்
எந்தவுலகுக்கும் ஏற்ற நல் இரட்சகன்
வந்தவதரித்த வானவராம் நேசன்
சொந்தம் நம்மோடினின்றும் என்றும் சகவாசன் – ஏக
Yeagapparama Ozhi Enum Paalaganaai
Devan Paarinil Piranthaar
Neesa Magajana Paava parikaara
Nesa Manokaranaana Marisuthan
1.Paarthanil thaaviya Paavanth Tholaikkavae
Poorvaththil Pitha Neamapadi Theerkkar
Oor Arputhan Ezhumbiduva rena
Seer Peravothiya Seithi Vilangida
2.Aayarkal Raakaalam Aattu Manthai Kakka
Antharaththil Deva thoothar Mozhi keatka
Devalogam Kalikoornthu Paadal paada
Devan Bethlehem Aavin Koodathealaiyaha
3.Vinninil Jothikal Ennila Seanaikal
Manninil Jaathi Uyirthiral Pottrida
Kanninil Kannoliyagum Kumaranaai
Annalaam Yesu Arunodhayamana
4.Antharathil Devasunthara paalagan
Enthaulagukkum Yettra nal Ratchkan
Vanthavathariththa Vaanavaraam Neasan
Sontham Nammodinintrum Entrum Sagavaasan