Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர்

யாரிலும் மேலான அன்பர்,
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்,
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்
நேசித்தாலும் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!

2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார,
மா நேசரே;
பற்றிக்கொண்ட என்னை விடார்,
மா நேசரே!
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!

3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு,
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு,
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும் நில்லு;
நேரே மோட்ச பாதைச் செல்லு,
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!

4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மாநேசரே
சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் ,
மா நேசரே
கொண்ட நோக்கம் சித்தி செய்வார் ,
நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks