வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil
1. வியாதியஸ்தர் மாலையில்
அவஸ்தையோடு வந்தனர்;
தயாபரா, உம்மண்டையில்
சர்வாங்க சுகம் பெற்றனர்.
2.பற்பல துன்பம் உள்ளோராய்
இப்போதும் பாதம் அண்டினோம்
பிரசன்னமாகித் தயவாய்
கண்ணோக்குவீரென்றறிவோம்
3.விசாரம் சஞ்சலத்தினால்
அநேகர் கிலேசப்பட்டனர்;
மெய்பக்தி அன்பின் குறைவால்
அநேகர் சோர்வடைந்தனர்.
4.உலகம் வீண் என்றறிந்தும்
பற்றாசை பலர் கொண்டாரே;
உற்றாரால் பலர் நொந்தாலும்,
மெய்நேசர் உம்மைத்தேடாரே.
5.மாசற்ற தூய தன்மையை
பூரணமாய்ப் பெறாமையால்,
எல்லோரும் சால துக்கத்தை
அடைந்தோம் பாவப் பாசத்தால்.
6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்
மா துன்பம் நீரும் அடைந்தீர்;
எப்பாடும் பாவமும் அன்பாய்
ஆராய்ந்து பார்த்து அறிவீர்.
7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே,
ஆரோக்கியம் எல்லாருக்கும்
இம்மாலை தாரும், இயேசுவே.
1.Viyathiyasthar Maalayil
Avasthaiyodu Vanthanar
Thayaaparaa Ummandaiyil
Sarvaanga Sugam Pettranar
2.Parpala Thunbam Ulloraai
Ippothum Paatham Andinom
Pirasannamaagi Thayavaai
Kannokkuveer Entrarivoom
3.Visaaram Sanjalaththinaal
Anegar Kilasappattanar
Meibakthi Anbin Kuraivaal
Anegar Soarvadainthanar
4.Ulagam Veen Entrainthum
Pattraasai Palar Kondaarae
Uttraaraal Palar Nonthaalum
Mei Neasar Ummai Theadaarae
5.Maasattra Thooya Thanmaiyai
pooranaami Poraamaiyaal
Ellorum Saala Thukkaththai
Adainthom Paava Paasaththaal
6.Ah,Kiristhuvae Mannuruvaai
Maa Thunbam Neerum Adaintheer
Eppaadum Paavamum Anbaai
Aaraainthu Paarthu Ariveer
7.Um Vaarththai Intrum Palikkum
Neer Thottaal Sostham Aavomae
Aarokkiyam Ellarukkum
Immaalai Thaarum Yeasuvae