தொகையறா:
விண்ணகத்தில் விண்ணவர் புகழ்கின்றனர்..
மண்ணகத்தில் மாந்தரெல்லாம் மகிழ்கின்றனர்..
நீல வண்ண வானை நோக்கி
உயரும் இந்தக் கொடியிலே…
பிரகாசமாய் வீற்றிக்கும் எங்கள் பிரகாச மாதாவே..!
Pallavi
விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே – என்
அன்னையே உன் வெற்றிக்கொடி பறக்கின்றதே – (2)
என் நெஞ்சில் என்றும் வாழும்
அணையாத தீபம் நீயே
மாறாத அன்பு தாயே..
மரியே நீ வாழ்க – (2)
மரியே… வாழ்க (3)… தாயே வாழ்க (1)
Charanam
புயல்காற்றில் தத்தளித்த கப்பலையும் கரைசேர்க்க
பணிவோடு வேண்டி நின்றார் உன்னிடத்திலே..
வீழ்ந்தோரின் ஆறுதலே தேடிவரும் தேறுதலே
வழிகாட்டும் ஒளியானாய் காரிருளிலே
தினந்தோறும் நாங்கள் உந்தன் பூமுகத்தை காணவே
ஆலயம் அமைந்ததம்மா கானகத்திலே..
இருள்சூழ்ந்த வேளையிலே வாடிநின்ற போதிலே
துன்பத்தில் துணைநிற்கும் தாயே மாமரியே
வாழ்வில் ஆயிரம்.. தடைகள் நேரினும்..
உந்தன் பாதையில்.. பயணம் செய்திடுவோம்
இருளும் மறைந்தது.. ஒளியும் பிறந்தது
ஆனந்தமாகவே பாடி புகழ்ந்திடுவோம்..!
மரியே… வாழ்க (3)… தாயே வாழ்க (1)