Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு

விண்டார் கிறிஸ்தேசு – Vindaar Kiristhesu

1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்பட
வென்றே ஒரு உவமை
உண்டு ஒருவனுக்குப் – புதல்வர்
இரண்டவரிலிளைஞன்

2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்
வந்திடும் பங்கதனை
தந்திடுமென்று கேட்டுத் – தவறாமல்
தன் வீதம் வாங்கிக்கொண்டான்

3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள்
செய்தான் பல தோஷம்;
தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த்
தீர்ந்தான் வெகு மோசம்

4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப்
பசியினால் வருந்தி
பஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத்
தஞ்சமென்று சார்ந்தான்

5. பன்றிகளை மேய்த்தான் – தவிட்டினால்
பசியாற நினைத்தான்;
பன்றிக்கிடுந்தவிடும் – கிடையாமல்
பட்டினியாய்க் கிடந்தான்

6. புத்தி மிகத் தெளிந்து – புலம்பினான்
மெத்தப் பசி ஐயையோ!
எத்தனை பேர்க்குணவோ – பூர்த்தியாய்
என் பிதா வீட்டிலுண்டு!

7. எழுந்து இப்பொழுதே – ஏகுவேன்
என் பிதாவின் சமுகம்
விழுந்து நான் தொழுதே – குற்றத்தை
விள்ளுவே னென்றுரைத்தான்

8. தந்தையை வந்து கண்டான் – தரை மட்டும்
தாழ்ந்து தொழுதழுதான்
எந்தையே உந்தனுக்கும் – பரத்துக்கும்
ஏற்காத தோஷி என்றான்

9. மைந்தன் மறுகுவதும் – அவன் ரூபம்
மாறி யிருப்பதுவும்
கந்தை யணிந்ததுவும் – கண்டு பிதா
நொந்து மனம் மெலிந்தான்

10. சுத்திகரித்தெடுத்து – உயர்ந்த
சுத்த ஆடை தரித்து
மெத்த விருந்தளித்து – சந்தோஷ
நித்தப்பவுசளித்தான்

11. இந்த இளைஞனைப்போல் – குணப்படா
தெந்தெந்தப் பாவிகளும்
வந்து அறிக்கை செய்தால் – இயேசு பாவம்
மன்னித்தாசி அளிப்பார்

Vindaar Kiristhesu – gunapada
ventre oru vuvamai
Undu Oruvanuku Puthalvar
Erandavari-Lilaingan

Thanthaiyae Enthanukku Thanathinil
Vanthidum Pangathanai
Thanthidumentru Keattu Thavaramal
Than Veetham Vangi kondan

Sentranayaal Desam thunmaarkangal
Seithaan Pala Thosham
Thinraa nealaam Naasam – Varinganaai
Theernthaan Vegu Mosam

Panjathinaal Mealinthu- Vayittru
Pasiyinaal Varunthi
Panjam Pilaikaventru – oruvanai
Thanjamentru Saarnthaan

Pantrikalai Meaithaan- Thavittinaal
Pasiyaara Ninainthaan
Pantrikidanthavidum – Kidaiyamal
Pattiniyaai Kidanthaan

Puththi Miga thealinthu – Pulambinaan
Meththa Pasi Aiyyo !
Eththanai Poorgunavo – poorthiyaai
En pitha veettilundu

Ezhunthu Ippozhuthae – yeaguvean
En Pithavin Samugam
Vizhinthu Naan Thozhuthae – kuttraththai
Villuvae Entrvuraithaan

Thanthaiyae Vanthu Knadaan – Tharai Mattum
Thaazhnthu Thozhuthazhuthaan
Enthaiyae Unthanukkum – paraththukkum
Yearkaatha Thooshi Enthrran

Mainthan Maruguvathum – Aavan Roobam
Maari Iruppathuvum
Kanthai Aninthu – kandu Pitha
Nonthu Manam Mealinthaan

Suththikarith Theduthu – Uyarntha
Suththa Aadai Thariththu
Meththa Virunthalithu – Santhosha
Niththapauvsaliththaan

Intha Elainganai Pol – Gundapada
Thenthentha Paavikalum
Vanthu Arikkai Seithaal – yesu Paavam
Mannithaasi Azhippaar

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version