வீரா அதோ பார் – Veera Atho Paar
1. வீரா அதோ பார்!
சத்ரு படையார்;
கொடி உயர்த்திச் செல்லுவோம்
போருடை அணிந்து
ஸ்வாமியைப் பணிந்து
முன் செல் சத்தியமாய் நாம் வெல்வோம்!
பல்லவி
வெல்வோம் செல்வோம், வெற்றிக் கொடியுடனே
ஜெயம் பயமின்றிப் போர் செய்வோம்!
முன்னும் பின்னும் ஓசன்னாப் பாட்டோடு
மீட்பர் நாமத்திற் கென்றும் ஜெயம்!
2. வைரியை வெல்ல
தைரியமாய் செல்ல,
திடன் நம் நல்ல நோக்கமே!
போருடை மினுங்க,
வேதாளம் நடுங்க
வீரா இதுவே நல் மார்க்கமே! – வெல்வோம்
3. சர்வ வல்லவா,
ஜெபம் கேட்டு வா!
துணை புரிய எமக்கு!
போர் முடிந்த பின்,
வெற்றி பெற்ற பின்,
வந்து உந்தன்
கிரீடம் பெறுவோம்! – வெல்வோம்
1.Veera Atho Paar
Sathru Padaiyaar
Kodi Uyarththi Selluvom
Porudai Aninthu
Swamiyai Paninthu
Mun sel saththiyamaai Naam Velvom
Velvom selvom vettri kodiyudanae
Jeyam Bayamintri Poor seivom
Munnum Pinnum Osanna Paattodu
Meetpar Naamaththir kentrum Jeyam
2.Vairiyai Vella
Thairiyamaai Sella
Thidan Nam Nalla Nokkame
Porudai Minunga
Vedhaalam Nadunga
Veera Ithuvae Nal Maarkkame
3.Sarva vallavaa
Jebam keattu vaa
thunai Puriya Emakku
Poor mudintha pin
Vettri Peattra PIN
Vanthu Unthan
Kreedam Pearuvom