வீண் பக்தியாய் நடவா – Veen Bakthiyaai Nadava
பல்லவி
வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா
காண்பதெல்லாம் அழியும்!
சரணங்கள்
1. வானஜோதிகள் சத்தியமோ?
வந்த மேசியா அசத்தியமோ?
பித்தலாட்டமோ மனுஷா? – ஓ மனுஷா
2. எத்தனை காலமிருந்தாலும்
இல்லம் விடுவது மெய்யல்லோ?
இன்பமுக்தி தேடவேண்டாமோ? – ஓ மனுஷா
3. பக்தர்களின் சாட்சியை நீ
நித்தம் பங்கமென் றிகழ்வாயோ?
எத்துவாதமோ மனுஷா? – ஓ மனுஷா
4. நாதனைப் போற்றிடும் நாவினால்
நரர் துதிகள் பாடாதே;
லோகத்தின் மேல் ஆசை வையாதே! – ஓ மனுஷா
5. அண்ணல் யேசுவைச் சேர்ந்திட்டால்
அவரருளைப் பெற்றிடுவாய்;
விண்ணில் வாழ்வும் சுகித்திடுவாய்! – ஓ மனுஷா
Veen Bakthiyaai Nadavaa Oh Manusha
Kaanpathellam Azhiyum
1.Vaana Jothikal saththiyamao?
vantha Measiya Aathathiyamao
Piththalattamo manusha – Oh Manusha
2.Eththanai Kaalamirunthalum
Illam Viduvathi Meiyallo
Inbamukthi Theada Vendamo- Oh Manusha
3.Baktharkalin Saatchiyai Nee
Niththam Bangamen trikalvaayo
Eththuvaathamo manusha – Oh Manusha
4.Naathanai Pottridum Naavinaal
Narar Thuthikal paadathae
Logaththin Mael aasai vaiyatahe – Oh Manusha
5.Annal Yesuvai searnthittaal
Avararulai Pettriduvaai
Vinnil Vaazhvum Sugiththiduvaai – Oh Manusha