பல்லவி
வேத வசன விதைதனைப் புவியில்
விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்
அனுபல்லவி
போதனையைக் கேட்டுப் புத்தியாக நடப்போர்
வேதனைகள் நீங்கி விண்ணிலென்றும் வாழ்வர்
சரணங்கள்
1. அதிசய வசனம் இந்திய கரையில்
செடியாய் மரமாய் நடப்பட்டு வருதே
நடப்பட்டு வருதே நலமிக்கத் தருதே
பெரும் பாவியிடம் பேர் பெற்று வருதே – வேத
2. தீயராம் பாவிகள் துன்புறும் வேளையில்
தூணாய்த் துணையாய் துலங்கிடும் வசனம்
இந்தியர் மனதில் இறுகவே பாய
ஈசனின் கிருபை இலங்கிடச் செய்யும் – வேத
3. நால் வகைத் தாளங்களோடு
ஆட பாட சபை மிகக் கூட
சபை மிகக்கூட சாமி வந்து சேர
சங்கீதங்கள் பாட சந்தோஷங் கொண்டாட – வேத