Veda Vasana Vithaikalai – வேத வசன விதைகளை

வேத வசன விதைகளை

பல்லவி

வேத வசன விதைகளைப் புவியில்
விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்.

அனுபல்லவி

பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம்
பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத

சரணங்கள்

1. அதிசய வசனம் இந்திய கரையில்
ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே,
நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே,
நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத

2. தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில்,
தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம்,
நேயமாய் மனதில் இறுகவே நின்று
நிமலன் கிருபை நிறைவுறச்செய்யும். – வேத

3. நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட
நடனமுடை சபைமிகக்கூடச்
சாலவே மக்கள் இன்னிசை பாடச்
சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட – வேத

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks