வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு
ஆறுதல் தருகிறார்
சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது
இரக்கம் காட்டுகிறார்

1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்
பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?
மறந்து போவாளோ?
கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?
இரங்காதிருப்பாளோ?
தாய் மறந்தாலும்
தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே
அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார்

2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்
சுற்றிலும் பார் மகளே (மகனே)
உன்னைப் பாழாக்கினவர்கள்
புறப்பட்டுப் போகிறார்கள்
பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது
பாடி மகிழ்கின்றது
பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
அணிகலன் போல் நம் தேசத்தை
சபை நீ அணிந்து கொள்வாய்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks