Vaarum siluvaiyadiyilae – வாரும் சிலுவையடியிலே

வாரும் சிலுவையடியிலே – Vaarum siluvaiyadiyilae

பல்லவி

வாரும் சிலுவையடியிலே – வந்தண்ணலேசை
பாரும் துயர் நீங்கிடவே

அனுபல்லவி

பூரண இரட்சையடைந்து புண்ணியன் கிருபை பெற்று
தாரணியிலும் மகிழ்ந்து வாழ அவரில் ஜீவித்து

சரணங்கள்

1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி – அவர் விலாவில்
விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கி
செம்மையாய்க் கழுவப்பட்டு சீர்முழு இரட்சையைப் பெற்று
உண்மையா யவருந்தனின் உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா

2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும் – அப்போதும் உள்ளம்
பாவ மற்று சுத்தி பெற்றிடும்
தேவசுதன் திரு இரத்தம் மூழ்க முழு இரட்சைவரும்
ஆவலோடு அவரை நீர் தேடி இதோ வந்துவிடும்! – வா

3. சேரும் இரட்சண்யப் படையிலே – தைரிய மடைய
வாரும் யுத்த முன்னணியிலே!
ஜீவித்திடும் வெளிச்சத்தில் சுத்தி நீர் ஆசிப்பீராகில்
கூவியவரைக் கெஞ்சும் பூர்ண இரட்சை வேண்டுமாகில் – வா

4. பரிசுத்தம் வேண்டுமாகில் நீர் – பாரச் சிலுவை
பற்றி அதை விட்டிடாதேயும்
பூலோக ஐசுவரியம் பூவைப்போல் வாடிடுமென்று
மேலவன் பாதத்தைத் தேடும்; மேன்மை சுத்திதனை நாடும்! – வா


Vaarum siluvaiyadiyilae – Vanthanannaleasai
Paarum Thuyar Neengidave

Poorana Ratchaiyadainthu Punniyan Kirubai pettru
Thaaraniyilum Mgilnthu Vaazha Avaril Jeeviththu

1.Immaiselvam Arpamentrenni-Avar Vilaavil
Vimmippaayum Raththathil Moolgi
Semmaiyaai Kazhuvapattu Seer Muzhu Ratchai Pettru
Unmaiya Yavarunthanin Ullaththil Vaazhnthida Ventru

2.Jeeva Oottril Vanthu Moolgidum Appothum Ullam
Paava Mattru suththi pettridum
Deva suthan Thiru Raththam Moolka Muzhu Ratchaivarum
Aavalodu Avarai Neer Theadi Itho Vanthu vidum

3.Searum Ratchanya Padaiyilae Thairiya Madaya
Vaarum Yuththa Munnaniyilae
Jeeviththidum Velichaththil Suththi Neer Aasippeerakil
Kooviyavarai Kenjum Poorna Ratchai Vendumaagil

4.Parisuththam Vendumaagil Neer Paara Siluvai
Pattri Athai Vittidatheyum
Boologa Aiswariyam Poovai pol Vaadidumentru
Mealavan Paathathai Theadum Meanmai Suththithanai Naadum

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version