உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்
வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு
உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை