Un katharuthalai – உன் கதறுதலை
உன் கதறுதலை கேட்கின்ற தேவன்
உன் கண்ணீரின் மத்தியில் இருக்கின்றாரே
உன் கவலையை காண்கின்ற தேவன்
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உன் கவலையை காண்கின்ற தேவன்
உன்னை ஒருபோதும் கைவிடாரே
நெஞ்சமே நீ ஏன் கலங்குகி்றாய்?
உனக்குள் ஏனோ தியங்குகிறாய்? (2)
காற்றையும் கடலையும் அதட்டியே
அமர்த்திய தேவன் உன்னோடே (2)
உன்னோடே..
வியாதியின் வேதனை உனை வாட்டுதோ?
மரணத்தின் பயம் உன்னை தொடர்ந்திடுதோ? (2)
கைவிடப்பட்ட வேளையிலும்
உன்னோடு இருப்பவர் இயேசுதானே (2)
இயேசுதானே..