தாயான தகப்பனாய்
தாங்கி என்னை ஏந்தி
சுமந்து வந்தீரே
உம் அன்பு கரம் நீட்டி
அள்ளி அணைத்தென்னை
தூக்கி சுமந்தீரே
உம் அன்பை மறவேன்
உமக்காய் வாழ்வேன்
என் தாயான தகப்பன் நீரே
என்னை தாங்கியே சுமந்தீரே
1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரே
என் தவிப்புகளில் என்னை தேற்றினீரே
பெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்
என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை
2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரே
உம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரே
இராப்பகலாய் கண்ணுறங்காமல்
கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை