தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள்

1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்
அஞ்சாதிருங்கள்
அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுபட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன் வழியாய்
நடந்து செல்வார்கள்

3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

4. பார்வைற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள்போல
துள்ளிக்குதிப்பர்கள்
ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்

5. வறண்ட நிலம் நீருற்றால்
நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
நரிகள் தங்கும் வளைகள் எங்கும்
கோரை முளைக்கும்
நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks