இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer
இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம் அன்பின் ஈவாய் அருள்வீர் அனுபல்லவி துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில் நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும் சரணங்கள் 1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர் நல்கும் தயை உறவே புன்மை மிகு பவத் தன்மைய ராயினும் போந்த நலமெமக் கீந்த தயாளராம் 2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும் அன்போ டெந்நாளும் ஐயா தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம் தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;