N

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய்

1. நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 2. ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்’ ஆ ஸ்வாமி, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன், இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 3. என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்; பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 4. என் […]

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய் Read More »

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன்

1.நான் எங்கே ஓடுவேன், மா பாதகனானேன், தீட்பெங்கும் என்னை மூடும், யார் ஆத்ரிக்கக் கூடும்; என் திகில் லோகத்தார்கள் அனைவருடத நீக்கார்கள். 2.அன்புள்ள, இயேசுவே, வா என்று சொன்னீரே, என் மனமும்மைப் பற்றும்; என் க்லேகமும் இக்கட்டும் தணிய, தயவாகத் திடன் அளிப்பீராக. 3.என் பாவத்தால் உண்டாம் விசாரத்தோ டெல்லாம் நான் எனக்காய் மடிந்த உம்மண்டையே பணிந்த ஜெபத்தியானமாக வந்தேன், ரட்சிப்பீராக. 4.சிந்துண்ட உம் வல்ல இரத்தத்தால் எல்லா அழுக்கும் என்னில் வாங்கும், என் நோயில் என்னைத்தாங்கும்;

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன் Read More »

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால்

1. நாங்கள் பாவப் பாரத்தால் கஸ்தியுற்றுச் சோருங்கால் தாழ்மையாக உம்மையே நோக்கி, கண்ணீருடனே ஊக்கத்தோடு வாஞ்சையாய் கெஞ்சும்போது, தயவாய் சிந்தை வைத்து, இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 2. மோட்சத்தை நீர் விட்டதும், மாந்தனாய்ப் பிறந்ததும் ஏழையாய் வளர்ந்ததும், உற்ற பசி தாகமும், சாத்தான் வன்மை வென்றதும் லோகம் மீட்ட நேசமும் சிந்தை வைத்து, இயேசுவே, எங்கள் வேண்டல் கேளுமே. 3. லாசருவின் கல்லறை அண்டை பட்ட துக்கத்தை சீயோன் அழிவுக்காய் நீர் விட்ட சஞ்சலக் கண்ணீர்

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால் Read More »

Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி

1. நீர் திவ்விய வழி, இயேசுவே நீர் பாவ நாசர்தாம் பிதாவிடத்தில் சேர்வதும் உமது மூலமாம். 2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே உம் வாக்கு ஞானமாம்; என் நெஞ்சில் அதின் ஜோதியால் பிரகாசமும் உண்டாம். 3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே வெம் சாவை ஜெயித்தீர்; உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும் சாகாமை ஈகுவீர். 4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்; அவ்வழி செல்லவும், சத்தியம் பற்றி, ஜீவனை அடையவும் செய்யும்.

Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி Read More »

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே

1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம். 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை திடப்படுத்துமே. 3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்! இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும். 4. என் ரட்சகா, என் கேடகம், என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் பொக்கிஷம், அனைத்தும் நீர்தாமே. 5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும், என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும்,

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே Read More »

Naan Devareerai Kartharae – நான் தேவரீரை கர்த்தரே

1.நான் தேவரீரை, கர்த்தரே, துதிப்பேன்; அடியேன் எல்லாரின் முன்னும் உம்மையே அறிக்கை பண்ணுவேன். 2.ஆ, எந்தப் பாக்கியங்களும் உம்மால்தான் வருமே; உண்டான எந்த நன்மைக்கும் ஊற்றானவர் நீரே. 3.உண்டான நம்மை யாவையும் நீர் தந்தீர், கர்த்தரே; உம்மாலொழிய எதுவும் உண்டாகக் கூடாதே. 4.நீர் வானத்தை உண்டாக்கின கர்த்தா, புவிக்கு நீர் கனிகளைக் கொடுக்கிற பலத்தையும் தந்தீர். 5.குளிர்ச்சிக்கு மறைவையும் ஈவீர்; எங்களுக்குப் புசிக்கிறதற் கப்பமும் உம்மால் உண்டாவது. 6.யாரால் பலமும் புஷ்டியும் யாராலேதான் இப்போ நற்காலஞ் சமாதானமும்

Naan Devareerai Kartharae – நான் தேவரீரை கர்த்தரே Read More »

Nearthiyaana thanaithum – நேர்த்தியானதனைத்தும்

நேர்த்தியானதனைத்தும் சின்னம் பெரிதெல்லாம் ஞானம், விந்தை ஆனதும் கர்த்தாவின் படைப்பாம். 1. பற்பல வர்ணத்தோடு மலரும் புஷ்பமும், இனிமையாகப் பாடி பறக்கும் பட்சியும். 2. மேலோர், கீழானோரையும் தத்தம் ஸ்திதியிலே, அரணில், குடிசையில் வசிக்கச் செய்தாரே 3. இலங்கும் அருவியும், மா நீல மலையும் பொன் நிற உதயமும் குளிர்ந்த மாலையும் 4. வசந்த காலத் தென்றல், பூங்கனித் தோட்டமும் காலத்துக்கேற்ற மழை, வெய்யோனின் காந்தியும். 5. மரமடர்ந்த சோலை பசும் புல் தரையும், தண்ணீர்மேல் தாமரைப்பூ,

Nearthiyaana thanaithum – நேர்த்தியானதனைத்தும் Read More »

Naan Thothanaaka Vendum – நான் தூதனாக வேண்டும்

1. நான் தூதனாக வேண்டும் விண் தூதரோடேயும் பொற் கிரீடம் தலை மேலும் நல் வீணை கையிலும் நான் வைத்துப் பேரானந்தம் அடைந்து வாழுவேன்; என் மீட்பரின் சமுகம் நான் கண்டு களிப்பேன். 2. அப்போது சோர்வதில்லை கண்ணீரும் சொரியேன் நோய், துக்கம், பாவம், தொல்லை பயமும் அறியேன் மாசற்ற சுத்தத்தோடும் விண் வீட்டில் தங்குவேன் துதிக்கும் தூதரோடும் நான் என்றும் பாடுவேன். 3. பிரகாசமுள்ள தூதர் நான் சாகும் நேரத்தில் என்னைச் சுமந்து போவார் என்

Naan Thothanaaka Vendum – நான் தூதனாக வேண்டும் Read More »

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர்

1. நாதா, ஜீவன் சுகம் தந்தீர் நாடி வந்த மாந்தர்க்கு இன்றும் ஜீவன் சுகம் ஈவீர் நோயால் வாடுவோருக்கு, நாதா, உம்மைப் பணிவோம் பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம். 2. ஆவலாய் சிகிச்சை நாடி சாவோர் பிணியாளிகள் வைத்தியர் சகாயர் தேடி வருவாரே ஏழைகள் நாதா, சுகம் அருள்வீர், பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர். 3. ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும், கையால் உள்ளத்தாலுமே பாசம் அநுதாபத்தோடும் பாரம் நீக்கச் செய்யுமே; நாதா, ஜெபம் படைப்போம், பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர் Read More »

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை

நான் மூவரான ஏகரை – Naan Moovaraana Yeagarai 1.நான் மூவரான ஏகரைஇன்றே துதித்தழைக்கிறேன்திரித்துவர் மா நாமத்தைஎன் ஆடையாக அணிந்தேன் 2.மெய் விசுவாசத் திண்மையால்நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன்கிறிஸ்துவின் அவதாரமும்யோர்தானில் பெற்ற தீட்சையும்சிலுவை மாண்டு மீட்டதும்உயிர்த்தெழல், பரமேறுதல்மா தீர்ப்புநான் பிரசன்னமும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 3.கேரூபின் நித்திய நேசமும்சேராபின் நீங்கா சேவையும்என்னாதர் கூறும் தீர்ப்புமேஅப்போஸ்தலரின் வேதமேமுன்னோர் கனா, தீர்க்கர் கூற்றும்கன்னியர் தூய நெஞ்சமும்சான்றோரின் செய்கை சேவையும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 4.நடத்த தெய்வ பெலனும்தற்காத்துக் கேட்டுத் தாங்கிடும்அவர்கள் காது சத்துவம்போதிக்க அவர் ஞானமும்நற்பாதை

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை Read More »

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே

1. நாதா உம் வார்த்தை கூறவே என்னோடு பேசியருளும் கெட்டோரை நானும் தேடவே நீர் என்னைத் தேடிப் பிடியும். 2. வழி விட்டலைவோருக்கு நான் காட்ட என்னை நடத்தும் மன்னாவைப் பசியுள்ளோர்க்கு நான் ஊட்ட என்னைப் போஷியும் 3. மா துன்ப சாகரத்தினில் அழுந்துவோரைத் தாங்கவும், கன்மலையான உம்மினில் நான் ஊன்றி நிற்கச் செய்திடும். 4. அநேக நெஞ்சின் ஆழத்தை என் வார்த்தை ஊடுருவவும், சிறந்த உந்தன் சத்தியத்தை எனக்குப் போதித்தருளும். 5. நான் இளைத்தோரைத் தேற்றவும்

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே Read More »

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் மரிக்க வந்து, சாவில் கிடந்த நம்மைத் தயவாய் நினைக்கும் அன்றிராவில் அன்புள்ள கையில் அப்பத்தை எடுத்துஸ்தோத்தரித்து அதற்குப் பிறகே அதை சீஷர்களுக்குப் பிட்டு வாங்கிப் புஷியுங்கள்,இது உங்களுக்காய்ப் படைத்து கொடுக்கப்பட்ட எனது சரீரம் என்றுரைத்து பிற்பாடு பாத்திரத்தையும் எடுத்துத் தந்தன்பாக உரைத்தது அனைவரும் இதில் குடிப்பீராக இதாக்கினைக்குள்ளாக்கிய அனைவர் ரட்சிப்புக்கும் சிந்துண்டுபோகும் என்னுட இரத்தமாயிருக்கும் புது உடன்படிக்கைக்கு இதோ என் சொந்த ரத்தம் இறைக்கப்பட்டு போகுது வேறே பலி அபத்தம் இதுங்கள் அக்கிரமங்களை

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks