lent songs

lent songs

lent songs lyrics

lent songs english

lent songs tamil lyrics

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது

1. என் மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும். 2.ஆ, அவரே, மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின், சாவத்தைச் சுமந்தார். 3.என் பாவத்தால், என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4.என் ஆண்டவர், என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கின்றார் என் ரட்சிப்புக்காக. 5.வெட்டுண்டோரே, ஆ, உம்மையே பணிந்தேன் ஆவிபேணும், ஆகிலும் என் நிமித்தம், நான் புலம்பவேண்டும். 6.குற்றமில்லா மகா கர்த்தா உமது ரத்தம் ஊறும்; மனந்தாபமின்றி […]

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது Read More »

En Arul Naatha – என் அருள் நாதா

என் அருள் நாதா – En Arul Naatha 1. என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால்வேறெதை நான் பாராட்டுவேன்?சிற்றின்பம் யாவும் அதினால்தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோபேரன்பும் துன்பும் கலந்தேபாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும்அவ்வன்புக்கு எம்மாத்திரம்!என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்குப் பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்சம்பாதித்தீந்த இயேசுவே,உமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம்

En Arul Naatha – என் அருள் நாதா Read More »

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட

1. இயேசுவே, நான் நீர் பட்ட பாடும் வேதனையும் கருத்தாய்த் தியானிக்க உமதாவியையும் பக்தியையும் தயவாய் தந்தென் மீட்புக்காக வதையுண்ட ரூபமாய் என்முன் நிற்பீராக. 2. நீரே பட்ட துயரம் ரத்த வேர்வை கட்டு கும்டுமிழ்நீர் தூஷணம் வாரடி இக்கட்டு சிலுவையின் மரணம் பாடெல்லாவற்றையும் அடியேனின் இதயம் உற்றுப் பார்த்தசையும். 3. இந்தப் பாட்டைப் பார்ப்பதும் அன்றி, அதற்கான காரணமும் பலனும் ஏதேதென்று காண உதவும்; என் பாவத்தை அத்தால் தீர்த்துவிட்டீர், எனக்காகக் கிருபை நீர் அவதரித்தீர்.

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட Read More »

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த

1 இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3 மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன்.

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த Read More »

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம்

1 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக. 2 லோகம் தன் சந்தோஷமான நரக வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான், இயேசுவே, உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும், அப்போ மோசங்கள் கலையும். 3 எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் எனக்கநுகூலம் செய்யும் என்பதே என் ஆறுதல்; ஏனெனில் நீர் எனக்கு பதிலாய் மரித்தது

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம் Read More »

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில்

உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil 1. உம் அவதாரம் பாரினில்கண்ணுற்ற பக்தனாம் யோவான்;கர்த்தா, உம் சாந்த மார்பினில்அன்பாகச் சாயவும் பெற்றான். 2. சாவுறும் தன்மை தேவரீர்தரித்தும், திவ்விய வாசகன்,அநாதி ஜோதி ரூபம் நீர்,என்றே தெரிந்துகொண்டனன். 3. கழுகைப் போல் வான் பறந்தேமா ரகசியம் கண்ணோக்கினான்;நீர் திவ்விய வார்த்தையாம் என்றேமெய்யான சாட்சி கூறினான். 4. உம் அன்பு அவன் உள்ளத்தில்பெருகி பொங்கி வடிந்து,அவன் நல் ஆகமங்களில்இன்னும் பிரகாசிக்கின்றது. 5. சீர் கன்னி மைந்தா, இயேசுவே,பூலோக

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில் Read More »

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய்

1. முதல் ரத்தச் சாட்சியாய் மாண்ட ஸ்தேவானே, கண்டாய்; வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும் தெய்வதூதன் போலவே விளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய் முதல் மாளும் பாக்கியனாய், அவர்போல் பிதா கையில் ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய் ரத்த பாதையில் சென்றாய் இன்றும் உன்பின் செல்கின்றார் எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம், கன்னி

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய் Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம்

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

Kallana Nenjam – கல்லான நெஞ்சம்

கல்லான நெஞ்சம் கரைந்து போகும்உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலேகர்த்தர் இயேசு நீர் பலியானீரேகொல்கொதா மலைமீதே ஏனிந்த பாடுகளோஎன் பாவம் சுமப்பதற்கா..?வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேவாருங்கள் என் அண்டையில்நான் தருவேன் இளைப்பாறுதல்(2)என் சுமை லேசானதுஎன் பாரம் இலகுவானது ஏனிந்த காயங்களோஎன் நோய்கள் சுமப்பதற்கா..? சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்சாவாமை உள்ளவர் நான்என் காயத்தால் சுகமாக்கினேன்உன் நோய்கள் நான் சுமந்தேன்என் தழும்பினால் குணமாக்கினேன் ஏனிந்த வேதனையோஎன் கண்ணீர் துடைப்பதற்கா..?எருசலேமே என்று நான் அழுதேன்என்னண்டை சேர்ப்பதற்காக..?என் ஜீவன் உனக்குத்

Kallana Nenjam – கல்லான நெஞ்சம் Read More »

Golgathavin sikarathilae Lyrics

கொல்கதாவின் சிகரத்திலேஒரு குழந்தை போல அழுது விட்டேன் நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா விம்மி விம்மி அழுகிறேன் என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் – கொல்கதாவின் ஆணிகள் அறைந்தவனை கூடநீர் அப்பா மன்னியும் என்றீர் !விம்மி விம்மி அழுகிறேன்என்னை வெறுமையாய் உணர்கிறேன் அப்பா என் அப்பா இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா– கொல்கதாவின்ரோஜாவின் தலையில் முள் முடியா?ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?விம்மி விம்மி அழுகிறேன்அந்த வேதனையை உணர்கிறேன் அப்பா

Golgathavin sikarathilae Lyrics Read More »

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மை யன்றி வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்றும் தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேஉம் சொந்த மாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்ட என் இயேசையாஎத்தனையோ துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் செய்வேன் உம் சேவையே 3. வானமீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாளன்றோலோக மீதில் காத்திருப்போர்ஏகமாகக் கூடிட தியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய்த் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம்

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ Read More »

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய்

பல்லவி நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்ததுநேயமாய் மறைந்துய்குவேன் சரணங்கள் 1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,தூயன் விலாவினின்று;-அதால்சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்சுகமாக வாழ்வேனே. – நித்திய 2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்குஈடு நான் செய்வதில்லை;-தினம்சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,தீங்கு செய்வதில்லை – நித்திய 3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதிகொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,கோவே; அல்லாது துய்ந்திடேன் – நித்திய 4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளிமேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்விரைந்துனில் மறைந்துய்குவேன் – நித்திய

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks