jebathotta jeyageethangal vol 8

என் ஜனமே மனந்திரும்பு – En Janame Manam

என் ஜனமே மனந்திரும்புஇயேசுவிடம் ஓடி வாஇறுதிக்காலம் வந்தாச்சுஇன்னமும் தாமதமேன் 1. உன்னை நினைத்து சிலுவையிலேதாகம் தாகம் என்றார்உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்கதன்னையே பலியாக்கினார் 2. தூய இரத்தம் உனக்காகதீய உன் வாழ்வு மாறகாயங்கள் உனக்காகஉன் நோயெல்லாம் தீர 3. உனக்காக பரலோகத்தில்உறைவிடம் கட்டுகிறார்உன்னைத் தேடி வருகின்றார்இன்று நீ ஆயத்தமா – மகனே 4. உன் பாவங்கள் போக்கிடவேசிலுவையை சுமந்தாரேஉன் சாபங்கள் நீக்கிடவேமுள்முடி தாங்கினாரே

என் ஜனமே மனந்திரும்பு – En Janame Manam Read More »

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரேகூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே1. தேற்றிடும் தெய்வமேதிடம் தருபவரேஊற்றுத் தண்ணீரேஉள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர்பாவங்கள் போக்கிவிட்டீர்ஜெயமே உம் வரவால்ஜெபமே உம் தயவால் – தினம் 3. அபிஷேக நாதரேஅச்சாரமானவரேமீட்பின் நாளுக்கென்றுமுத்திரையானவரே – எங்கள் 4. விடுதலை தருபவரேவிண்ணப்பம் செய்பவரேசாட்சியாய் நிறுத்துகிறீர்சத்தியம் போதிக்கிறீர் – தினம் 5. அயல் மொழி பேசுகிறோம்அதிசயம் காண்கிறோம்வரங்கள் பெறுகிறோம்வளமாய் வாழ்கிறோம் 6. சத்துரு வரும் போதுஎதிராய் கொடி பிடிப்பீர்எக்காளம் ஊதுகிறோம்எதிரியை வென்று விட்டோம்

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal Read More »

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்எனக்கென்று எதுவுமில்லைஇப்பூமி சொந்தமில்லஎல்லாமே இயேசு…என் இயேசுஎல்லாம் இயேசு இயேசு இயேசு 1. பரலோகம் தாய்வீடுஅதைத் தேடி நீ ஓடுஒருவரும் அழிந்து போகாமலேதாயகம் வர வேண்டும் தப்பாமலே 2. அந்தகார இருளினின்றுஆச்சரிய ஒளிக்கழைத்தார்அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திடஅடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த 3. பாடுகள் அநுபவிப்பேன்பரலோக தேவனுக்காய்கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான் 4. இலாபமான அனைத்தையுமேநஷ்டமென்று கருதுகின்றேன்இயேசுவை அறிகின்ற தாகத்தினால்எல்லாமே இழந்து விட்டேன் நான்

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan Read More »

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதய்யா (உடையுதப்பா ) 1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் ஏங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்து பார்க்கையிலே ( என் )நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதையாமனிதர்கள் மூழ்கணுமேமறுரூபம் ஆகணுமே

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe Read More »

கர்த்தர் மேல் பாரத்தை – Karthar Mel Barathai

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடுகலங்கித் தவிக்காதேஅவரே உன்னை ஆதரிப்பார்அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர்நமது நிழலாய் இருக்கின்றவர் 3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போதுநமக்கு எதிராய் நிற்பவன் யார் 5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் 6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார்

கர்த்தர் மேல் பாரத்தை – Karthar Mel Barathai Read More »

எக்காளம் ஊதிடுவோம் – Ekkalam Oothiduvom

எக்காளம் ஊதிடுவோம்எரிக்கோவை தகர்த்திடுவோம்கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள்எதிரிகளை துரத்திடுங்கள்தீபங்களை ஏந்திடுங்கள்தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்வல்லமையால் நிரம்பிடுங்கள்சீறிவரும் சிங்கங்களைசிறைபிடித்து கிழித்திடுங்கள் 3. தெபோராக்களே விழித்திடுங்கள்உபவாசித்து ஜெபித்திடுங்கள்எஸ்தர்களே கூடிடுங்கள்இரவுகளை பகலாக்குங்கள் 4. அதிகாலையில் காத்திருப்போம்அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்கழுகுபோல பெலனடைந்துகர்த்தருக்காய் பறந்திடுவோம்

எக்காளம் ஊதிடுவோம் – Ekkalam Oothiduvom Read More »

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam

ஐயா உம்திரு நாமம்அகில மெல்லாம் பரவ வேண்டும்ஆறுதல் உம் வசனம்அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர்பேரொளியைக் கண்டுஇரட்சிப்பு அடைய வேண்டும்இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்றுவிடுதலை பெற வேண்டும்வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும்முடவரெல்லாம் நடக்கணும்செவிடரெல்லாம் கேட்கணுமேசுவிசேஷம் சொல்லணுமே

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam Read More »

என் தேவனே என் இயேசுவே – En Devane En Yesuve

என் தேவனே என் இயேசுவேஉம்மையே நேசிக்கிறேன் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமுடன் நாடுகிறேன் 2. என் உள்ளமும் என் உடலும்உமக்காகத்தான் ஏங்குதையா 3. துணையாளரே உம் சிறகின்நிழலில் தானே களிகூருவேன் 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் 5. உலகம் எல்லாம் மாயையையாஉம் அன்பு தான் மாறாதையா 6. படுக்கையிலும் நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

என் தேவனே என் இயேசுவே – En Devane En Yesuve Read More »

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom

பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக ( மகளாக )தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமுமவல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் 4. பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே 5. உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள்

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom Read More »

இரத்தக் கோட்டைக்குள்ளே – Raththa kottaikullae naan

இரத்தக்கோட்டைக்குள்ளேநான் நுழைந்துவிட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலேநெருங்காது சாத்தான்பாசமாய் சிலுவையில் பலியானார்பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபினேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனை விடஎன் தேவன் பெரியவரே 3. தேவனே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன் 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப் போல நடத்துகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் – என்னை 5. மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்அணைத்து சேர்த்துக்

இரத்தக் கோட்டைக்குள்ளே – Raththa kottaikullae naan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks