csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Alleluyaa Thuthi Alleluyaa – அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம்

பல்லவி அல்லேலூயா துதி, அல்லேலுயா ஜெயம், வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும். அனுபல்லவி சொல்லரும் சுத்த சுவிசேடந்தந்தவர் தூயன் சகாயனுபாயானாம் நேயற்கு. – அல்லே சரணங்கள் 1. வானம் புவியும்படைத்த பிதாவுக்கும் மைந்தரை மீட்ட சுதனென்ற தேவற்கும் ஞானவிசேடம் வெளியிட்ட ஆவிக்கும் நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம் – அல்லே 2. வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை மேதினியெங்கும் அனுப்பித்திருமறை தீதறப்போதகஞ் செய்யவழி செய்த சிங்காரக்கர்த்தர்க்கு மங்காமகத்வர்க்கு. – அல்லே 3. வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபை வாடாது மிக்க செழிப்பாய் வளர்ந்திட, […]

Alleluyaa Thuthi Alleluyaa – அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம் Read More »

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

1.சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத் தற்பரன் அருள்புரிக சந்ததம் இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க ஏகனார் தயைபுரிகவே தினம் 2.மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம் மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக் கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக் கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட 3.பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து போற்றிட ஒருமையுடன் தேவனை தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து தக்க துதியை அவர்க்குச் செய்யவே 4.நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும் நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே கூற்றேனும் பசாசின்கூட்டம்

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் Read More »

Vaarum Emadhu Varumai Theerka – வாரும் எமது வறுமை நீக்க வாரும்

வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!மழைதாரும், ஜீவனே. சரணங்கள் 1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே – வெகுகெடும் நீண்டதே. – வாரும் 2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே-மிகக்கஷ்டம் ஆச்சுதே. – வாரும் 3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே- மிகக்கஷ்டம் ஆச்சுதே. – வாரும் 4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா- நரர்தயங்கிறோம் மெய்யாய். – வாரும் 5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே – எங்கள்தயங்கல்

Vaarum Emadhu Varumai Theerka – வாரும் எமது வறுமை நீக்க வாரும் Read More »

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுதுதூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் 3.பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையாகோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் 4.ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் காவல் தா 5.ஆத்துமம்

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram Read More »

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் பல்லவி அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே அனுபல்லவி பொல்லாப் பேய் நடுங்கிவிழப்பொற்பரனின் சேயர் மகிழ. – அல் சரணங்கள்1. பாவம் பேயோடு மரணம்,பாழன் பேயினது அரணம்,சீவபரனால் திரணம்,திடமாயடைவோம் அவர் சரணம். – அல் 2. வலுசிங்கம் சிறையாச்சு,மாற்றானின் வல்லமை போச்சு,அலகையுளதோ பேச்சுஅதுவிடலாமோ இனி முச்சு. – அல் 3. திருநாதர் பேயிருபேர்செய்தார் கொடியதா மொருபோர்அருணாதர் தாம் ஜெயம் நேர்அடைந்தார் ஓ சபையே களிகூர்.

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் Read More »

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட பல்லவி வானோர் பூவோர் கொண்டாடமனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. அனுபல்லவி தீயதயாளன் திருமறைநூலன்,திரிபுவனங்களாள் செங்கோலன்,ஞானசு சீலன் நரரனுகூலன்,நடுவிடவே வருபூபாலன் – வானோர் சரணங்கள் 1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,அருமலர்க்கா காவலை யொழிந்தார்;நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர் 2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர் 3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,அருமறைக்

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட Read More »

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம்

பல்லவி பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம் பண்டிகை கொண்டாடுவோம் . சரணங்கள் 1. பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. – பண்டிகை 2. புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி – பண்டிகை 3. இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. – பண்டிகை 4. தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன் பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். – பண்டிகை 5. நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப் பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. – பண்டிகை

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம் Read More »

Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே

பல்லவி நேசபரனைத் துதிப்பாய், ஓ நெஞ்சமே! அனுபல்லவி தாசன் புவியோரில் மா நீசனென்னைப்பிடித்த மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர – நேச சரணங்கள் 1. மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்; வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார், சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்; சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார். – நேச 2. பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்? பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்? தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம், செப்புவேன் இங்குமங்கும்

Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே Read More »

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரைஎன்றும் கர்த்தருன்னைக் காப்பாரே அனுபல்லவி தன்னுடைய காவலுன்மேல்தப்பாம் வைத்துத்தற்காத்துக்தன்னிருகரத்தால் உன்னைத்தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன சரணங்கள் தன்னிரு சிறகுகளின் கீழ்உன்னை மறைத்துத்இன்னமும் திருமன்னாவைஎன்றும் உனக்களித்தேஇன்பமோடே உன்னைத் தாங்கிஎல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்சீருடனே கர்த்தர் காப்பரேபாவ சோதனைகள் உன்மேல்படர்ந்து பிடித்திடாமல்பாலித்தணைத்தே உன்னையேபட்சமோடே பாதுகாத்து – இன்ன ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்துஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய்நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்துநீண்ட காலமாக உன்னைநேசித்து

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில் Read More »

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும் 2.எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும் பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும் 3.ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ மாயினார் இது புதுமை 4.விண்ணுலகாதிபதி தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார் 5.சொல்லுதற் கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் 1.காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும் கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன், – இம் 2.பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi 1.தேவனே உம்மையாந் துத்தியஞ் செய்கிறோம் தேவரீர் கர்த்தனென் றெங்கும்பிரஸ் தாபிப்போம் 2.நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும் 3.சம்மன சோருட சர்வசே னைகளும் சாவிலா மண்டல சக்திகள் யாவரும் 4.சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல் சிந்தையாய் உந்தனின் சீர்புகழ் பாடுவார் 5.சேனையின் தேவனே கர்த்தரே நீர்மிக்க சுத்தரே சுத்தரே சுத்தரே என்கிறார் 6.வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை வாகுடன் காட்டுமே வள்ளலே

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version