சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham
பல்லவி சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும் தூரமாகாதாள்வாய், நேசனே. அனுபல்லவி எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. – சொல் சரணங்கள் 1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால் இறையோனே காதில் நுழையாதோ? திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி சேர்க்க என்றனை அழையாயோ? அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்; விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். – […]