SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே
சிநேகிதனே என் சிருஷ்டிகனே
உமது சீடனாக என்னை மாற்றினீர்
என்னை அழைத்தீரே அன்பை பொழிந்தீரே
என்னை பிரியம் என்றீரே
என்னை அணைத்தீரே அச்சம் தீர்த்தீரே
என் அழுகை துடைத்தீரே
பரதேசியான பாதகன் என்னை பரமன் நின் அன்பால் பந்தியில் சேர்த்தீர்
பசியாறினேன் நல் பங்கையடைந்தேன்
ஒன்றுக்கும் உதவாத என்னையும் தெரிந்தெடுத்தீரே
ஒப்பில்லா உம் அன்பினால் என்னையும் முன்குறித்தீரே
எனது ஜென்ம சாபங்கள் முற்றுமாய் பரிகரித்தீரே
ஜலத்தினாலும் ஆவியினாலும் மீண்டும் பிறக்கச் செய்தீரே
ஜெகம் வியப்படைய ஜெயம் தந்தீரே – இந்த
அடிமை நான் உம் வீட்டிலே என்றும் தங்கிட ஏங்குவேன்
அநாதியாம் உம் கிருபையை ஆராய்ந்து அறிந்திட வாஞ்சிப்பேன்
பேதையான என்னையும் ஞானவானாய் மாற்றினீர்
பெலவீனன் என்னையும் உமது பெலத்தால் நிரப்பினீர்
எஜமானனே உம் பணிசெய்வேனே
Snehithane En Sirustihane
Umathu Seedanaga Enai Matrineer
Ennai Azhaitheerae Anbai Pozhindheerae
Ennai Piriyam Endreerae
En Ennai Anaitheerae Acham Theertheerae En Azhugai thudaitheerae
Paradesiyana Padhagan Ennaiyum Paraman Um Anbal Pandhiyil Sertheer
Pasiyarinen Nal Pangai Adaindhen
Ondrukum Udhavadha Ennaiyum Therindhetutheere
Oppila Um Anbinal Ennayum Mun kuritheere
Enathu Jenma Sabangal Mutrumai Parigaritheere
Jelathinalum Aaviyinalum Meendum Pirika Seidheere
Jegam Viyappadaiya Jeyam Thandheerae- Intha
Adimai Naan Um Veetilae Endrum Thangida Yenguvaen
Anadhiyam Um Kirubaiyai Aaraindhu Arindhida Vanjipaen
Paedhaiyana Ennaiyum Gnanavanaai Matrineer
Belaveenan Ennayum Umathu Belathaal Nirappineer
Yejamanane Um Pani Seivaenae