Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில்

சிந்தை செய்யும் எனில் – Sinthai Seiyum Enil

சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்
சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர்

தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்
விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் – சிந்தை

1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய
சீலனாம் கிறிஸ்தியேசுக்கும்
சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ
கோலம் என்றன் பங்கதாயிற்று.
தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க
வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை

2.திரியேகதேவனே என்றெ அவரைவிட்டுப்
பிரியேன் என் பிராணன்போனாலும்
அரிய அவரின்தயையே எனக்கு என்றும்
உரிய ஒன்றான பொருளே.
பொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்
மெய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனக்கென்றும் ; – சிந்தை

3.பக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்
எத்திசையினும் விளங்கிடச்
சுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்
தத்தம்செய்யக் கற்பித்தருளும்
உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்
என்னகத்தினின்றும் துதிஏறுவதாக ஆமென்; – சிந்தை

Sinthai Seiyum Enil Nirambuveer Devaavi Umai
Sinthai Seiyum Enil Nirappuveer
Thanthai Paranaarinintrum Mainthanaar Kiristhinintrum
Vinthaiyaai Purapatteagum Viththagaththin Aaviyae Neer

1.Paalanaai Parama thanthaikkum Avarin Neaya
Seelanaam Kiristhiyeasukkum
Saalavae Entrennai Searththitteer Aththaalae Deva
Kolam Entran Pangathaayittru
Thanthai Thaayaar Thantha Vaakkai Sontha Vaayaal Naan Kodukka
Vanthirukkum Vealai Thanil Thanthai Suthan Aaviyae Neer

2.Thiriyeaga Devanae Entrae Avarai Vittu
Piriyean En Piraanan Ponaalum
Ariya Avarin Thaiyai Enakku Entrum
Uriya Ontraana Porulae
Poi Logam Maamsam Ennai Pidiththiluththaalum
Mei Parisuththa Aavi Uthauv Veer Enakentrum

3.Bakthiyulla Jeeviyam Seithu Pagalin Seayaai
Eththisaiyilum Vilangida
Suththamanam Seikaiyai Thaarum Enai Naan Entrum
Thaththam Seiya Karpiththarulum
Unnaththil Vaazha Thanthaikkum Uyar Suthan Aaviyarkkum
Ennakaththinintrum Thuthi Yearuvathaaga Amen.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks