சேர்வதெப்போது பாவி – Searvatheppothu Paavi
பல்லவி
சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை
சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை
சேர்வதெப்போது பாவி?
சரணங்கள்
- ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்
காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர் - அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து
இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர் - பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்
கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர் - திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்
உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர் - உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்
கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் – சேர் - இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது
கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் – சேர்
searvatheppothu paavi sorkka Inbaththai
searvatheppothu paavi Motcha Inbaththai
searvatheppothu paavi
1.Gnalaththil vantha Gurunaathanai paniyaamal
Kaalamirukkuthentru kavalaiyattirunthaal -sear
2.Atchayan yesuvin patchamathai maranthu
Ratchaiyai Thalli thooe itchaiyil thirinthaal-sear
3.Paava paaranj sumanthu parithavikkum paaviyai
Koovi Azhaithu Nirkkum Kavalanai vittaal -sear
4.Thirukku Murukku Pannum searukkulla Nenjaththaithaan
Urukkamulla yesuvin thirukaram vaiyavidil -sear
5.Ullaththai thiranthi nee unmaiyai ariyaamal
kallathanam panni kaalaththai kazhithaal-sear
6.Ratchakar vanthunnai ratchikka Nirkkum pothu
Katchi pannikondu thustanaaka alainthaal -sear