Sathirathai thedi Songs lyrics

பிறந்தார் -4
சத்திரத்தில் இடமில்லை
விண்ணுலகை துறந்தவர்கள்
மீட்பருக்கு இடமில்லை
மண்ணுலகில் பிறந்ததற்கு
மண்ணான மனிதனை மீட்க வந்தார்
மறுரூப உலகினைக் கொடுக்க வந்தார் – பிறந்தார்

1.அன்பென்னும் உறவிலே அகிலமே திளைத்திட
ஆதவன் தோன்றிவிட்டான் – எங்கள்
ஆண்டவர் தோன்றி விட்டார்
துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட
பாலகன் தோன்றி விட்டார் – இயேசு
பாலகன் தோன்றிவிட்டார்

2. பச்சிழங்குழந்தையாய் பாவங்கள் நீக்கிட
பாரினில் பிறந்துவிட்டார் – இயேசு
பாரினில் பிறந்துவிட்டார்
தச்சனின் மகனாக தத்துவஞானியாக
மனிதனாய் பிறந்து விட்டார் – தெய்வம்
மனிதனாய் பிறந்துவிட்டார்

3.தட்டினால் திறக்குமே கேட்டாலேபெறுவீரே
தேடினால் கிடைக்குமென்றார் இயேசு
தேடினால் கிடைக்குமென்றார்
எந்நாளும் வணங்குவோம் முகம்தாழ்த்தி வணங்குவோம்
உன்னை உயர்த்துவார்- இயேசு
ஆசீர்வதிப்பாரே

——-

பாடல் 20

ஜாலிதான் ஆஹா ஜாலி தான்- Christmas
வந்ததாலே எனக்கு ஜாலிதான்

1.New Dress New Dress தத்தாச்சி
Happy Mood-ம் வந்தாச்சி
Friends ஓடு ஆட்டந்தான்
புத்தம் புது பாட்டு தான்

2. சொந்தம் பந்தம் எல்லாமே
சேர்ந்து மகிழ கொண்டாட்டம்
பட்டாடை உடுத்திட
பட்டாசு வெடித்திட

3. என்னை தேடி வந்தார்
என்னைமீட்க வந்தாரு
எந்தன் சின்ன உள்ளமே
இயேசுவுக்கு சொந்தமே

—–

பாடல் 21

வானத்திலே ஒருஸ்டாரு – கண்
சிமிட்டும் அழகைப்பாரு
வழிகாட்டிடுதே வெகுஜோரு-2
ஆஹா இது ஒரு Wonder Star
ஆச்சர்யமான Leading Star

1.கிழக்கிலே உலா வந்திட
கீழ்த்திசை ராயர் மகிழ்ந்திட
வழிகாட்டும் விண்மீன் பின்னேராயரும் சென்றிட
அது இன்பமான பயணம்

2.சத்திரம் அருகே நின்றிட
சாந்த சொரூபனைக் கண்டிட
உலகாளும் மேசியாவின் பாதமே பணிந்தார்
பொன் போளம் தூபம் படைத்தார்

3.உமக்காக ஒளி வீசணும்
உலகுக்கு வழிக்காட்டும்
உம் நாமம் எங்கும் சொல்லும் பாத்திரமாகணும்
உமக்காக என்னைத்தந்தேன்

பாடல் 22

அதிகாலை வானம் வியப்போடு காண
விண்மீன்கள் கூட்டம் வாழ்த்துக்கள் ப பாட
மன்னன் உதித்தாரே மாட்டுத்தொழுவில்-2
பாவம் போக்க பாலகனாக பாரில் வந்தாரே
பாவம் போக்க பாரில் வந்தாரே

1. வானில் தோன்றிய தூதர் பாடிய ராகம் புதியது பாரு
விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியமுமே – மன்னன்…

2.கிழக்கில் தோன்றி பாதை காட்டும்
வெள்ளி புதியது பாரு
கீழ்திசை ஞானியர் பணிந்து வணங்கினான்
பொன்னும் பொருளுடனே-மன்னன்…

3.கன்னி வயிற்றில் கண்மணி
வந்திட்ட விந்தை புதியது பாரு
தீர்க்கனின் வார்த்தைகள் நிறைவேறுது
வேதம் சத்தியமே – மன்னன்

பாடல் 23

தீந்தமிழில் பாட்டெடுத்து
தித்திப்பானராகத்தோடு
தேவமைந்தன் இயேசுவையே பாடு
வானாதி வானம் போற்றியே பாடல்
வானதூதர்கள் வாழ்த்தியே பாட

1.வானவனே கண்தூங்கு
தந்தன தானா தாளம் போட்டு தாலேலோ நான் பாட
தங்கமே நீ தூங்கு பாலா தூங்கு
பாடாத ராகம் மீட்டாத தாளம்
தாலாட்டதூங்கு பாலா தூங்கு

2.தூதர் பாடும் துதியின்சத்தம் தேனாக சிதறிட
தூயவனே புல்லணையில் தூங்கு
மந்தை காத்த மேய்ப்பர் மதுர கீதம் பாட
மன்னவனே முன்னணையில் தூங்கு

பாடல் 24

சிறுபாலனாய் மனுவேலனாய்
மேசியா பிறந்தார்
ஏழைக்கோலமாய் சாந்த ரூபமாய்
இயேசையாபிறந்தார்

ஆரிரோ-4 மகிழ்ந்து பாடிடுவோம்
ஆரிரோ -4 துதித்து போற்றிடுவோம்

1.ராஜாதிராஜன் தேவாதி தேவன்
மாட்டுத்தொழுவில்
தீர்க்கன் உரைத்த தேவகுமாரன்
புல்லணை மஞ்சத்திலே
பாவங்கள் போக்கிட
சாபங்கள் நீக்கிட
பாலனாகப் பிறந்தார்

2.வானாதி வானம் போற்றியே பாடும்
வல்லவர் இவரே
வானதூதர்கள் வாழ்த்தி வணங்கும்
பரிசுத்தர் இவரே
அதிசய தேவன் அற்புதராஜ்
பாலனாக பிறந்தார்

3.பொன்னகர் விட்டு பூமி வந்தது
என்னை மீட்கவே
பொல்லாத சாத்தான் தலை நசுக்கி
என்னைகாத்திடவே
நன்றி சொல்லி பாடி
நாளெல்லாம் போற்றி
பாலனை வணங்குவோம்

பாடல் 25

இயேசு பிறந்தார் -2
சின்னஞ்சிறு பாலகனாய்
பெத்லகேமில் -2
மாட்டுத்தொழுவில்-2
தாழ்மையாகவே -2

பாடல் 26

கவிதைகள் பூக்கள் மலர
கானங்கள் தேன் துளியாய் சிதற
எத்தனை சந்தோஷம் எத்தனை சங்கீதம்
இயேசு பாலன் மண்ணில் வந்ததால்
ஆ… ஆனந்தம்
ஓ… பேரின்பம்

1.பாரெல்லாம் உம்மை பாட பாட
பாசத்தால் உம்மைத் தேடி தேட
பாவம் நீங்குதே பரிசுத்தமாகுதே
பாலன் வந்த இந்த நாளிலே – ஆ

2. நெஞ்செல்லாம் உம்மை பாட பாட
நினைவெல்லாம் உம்மைத் தேடதேட
உள்ளம் பொங்குதே அன்பு மலருதே
பாலன் வந்த இந்த நாளிலே – ஆ

பாடல் 27

இதயமே இதயமே கொண்டாட்டு
இதமான கீதங்கள் நீ பாட்டு
இயேசு பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
ஊரெல்லாம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
உலகெல்லாம் கிறிஸ்மஸ் ஆர்ப்பாட்டம்
கொண்டாடு கொண்டாடு – கிறிஸ்மஸ்

1.ஆகாய மீதினில் துதி பாடதூதர்பாட
ஆ.. என்ன விந்தை ஆயர் கூட விடை தேட
அச்சமின்றி நல்ல செய்தி கேளுங்க
அன்பினாலே வந்த செய்தி கேளுங்க
ஆனந்தம் ஆனந்தம்
அதிசய பாலனாக மேசியா பிறந்தாரே – ஊரெல்லாம்

2. ஆ.. எந்தன் இரட்சகர் இவர்தானோ இவர்தானோ
ஆ.. எந்தன் மீட்பரும் இவர்தானோ இவர்தானோ
கண்மணிபோல் காக்க வந்த மன்னனோ
கண்டுகொள்ள என்ன தவம் செய்தேனோ
ஆயர்கள் பாடினார்
அதிசய பாலனின் பாதமே பணிந்தேன் – ஊரெல்லாம்

3. பாவங்கள் போக்க எனை மீட்க தாக்க
பாரங்கள் நீக்க எனை காக்க சுகமாக்க
வானம் விட்டு பூமி வந்த பாலனே
தானமாக தன்னைத்தந்தராஜனே
பாடுவேன் பாடுவேன்
பாடப்பாட உள்ளமெல்லாம் தேனாக இனித்திடுதே-ஊரே

பாடல் 28

நினைத்தாலே இனிக்குதே
நெஞ்செல்லாம் மகிழுதே
நிகரில்லா சந்தோஷமே
நிறைவாகிப் பொங்குதே
ஆஹாஹா எந்தன் பாவம் மீட்க எந்தன் பாவம் போக்க
என்னை தேடி வந்து எனக்காக மரிக்க
இயேசு பாலன் பிறந்தார்

1.அழகான ஏதேன் தோட்டம்
தோட்டத்தில் தோன்றிற்று பாவம்
பாவம் தொடர்ந்தது சாபம்
அந்தோ பரிதாபம்
தேவன் உலகை மீட்டிட நினைத்தார்
தம்மைந்தனை உலகுக்கு தந்தார்
பாலனாக மனுவேலனாக
மண்ணில் ராஜன் இயேசு பிறந்தார் – நினைத்தாலே

2.2. தாவீதின் ஊரில் சத்திரம்
சத்திரத்தில் ஒரு தொழுவம்
தொழில் அழகாய் தவழும்
கண்மணி அவதாரம்
வான தூதர்கள் தாலாட்டு பாட
கான மேய்ப்பர்கள் பாராட்டிப் பாட
பாலன் மனுவேலனாக
மண்ணில் ராஜன் இயேசு பிறந்தார் – நினைத்தாலே

பாடல் 29

என் உயிரே இயேசு பாலா – உன்னை
பாடுவது என் பாக்கியமே
ஏழையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய்
எனைத் தேடி வந்ததால் உம்மைப்பாடுவேன்

1. கோடானு கோடிதூதர்கள் பாட
கோமகனாக வீற்றிருப்பீர்
விண்மேன்மை மறந்ததும் ஏனோ
மண்மீது பிறந்ததும் ஏனோ
என் பாவம் நீக்கிடும் தாகம்தானோ

2. ஆயிரம் ஆயிரம் பாடல்களால்
அவனியெல்லாம் உம்மை துதித்திடுதே
தேவன் தம் சித்தம் செய்ய
மைந்தனை உலகில் தந்து
இவ்வளவாய் அன்பு கூர்ந்தால்-2

பாடல் 30

மத்தாப்பு சிதறிட
மழலைகள் சிரித்திட – ஜாலி ஜாலி ஜாலி -2

1. கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகள் தருவார் ஜாலி
பாலன் இயேசு பரிசாக தருவார் ஹோலி

பாட்டு பாடி போற்றிட
பாலன் இயேசுவைப் போற்றிடு
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

2. அம்மா அப்பா தருவார் அன்பு செல்லம்
இயேசு அப்பாதருவார் அன்பு உள்ளம் பாட்டு

3. நண்பர் கூட்டம் தருவார் நல்ல நட்பு
இயேசு அப்பாதருவார் உனக்கு மீட்பு பாட்டு….


பாடல் 31

இரவிலே நள்ளிரவிலே
இசைமழை பொழியுதே
வானத்திலே நடுவானத்திலே
வாழ்த்திசை கேட்குதே

Happy Christmas Merry Christmas

1 தூதர்கள் பாடும் பாட்டு மேய்ப்பர்கள் அதைக் கேட்டு
சென்றாரே மந்தை விட்டு பாடினார் புது மெட்டு
மகிழ்ந்தார் பாலனைத்தொட்டு
என்ன தவம் செய்தோமையா
மேசியாவை நாம் கண்டு கொண்டால்
பாக்கியம் பெற்றோமே – Happy Christmas

2 அழகான வீணை மீட்டு
தப்பாது தாளம் தட்டு
பாடல்கள் புதிதாய் கட்டு
பாடிடும் கூட்டம் கூட்டு
மகிழ்ந்து பாடி தாலாட்டு
ஆரிரரோ ஆரிரரோ
சாந்தரூபனே சாகா ஜீவனே
சுந்தர மைந்தனே -happy christmas

பாடல். 32

பன் யார் யார் இவர் யாரோ (4)
விண்ணைதுறந்து மண்ணில் வந்த மன்னன் தானோ
மண்ணுலகை மீட்ட வந்த பாலகன் தானோ

1.எங்கும் இருள் ளங்கும் திகில்
எங்கும் கண்ணீர் எங்கும் வேதனை
இருளை நீக்கி ஒளியை தர
வந்தார் பலகனாய்
பிறந்தார் பிறந்தார்
அதிசயம் பாலன் பிறந்தார்

2. சொல்ல ஆகும் தொட்டால் நீங்கும்
கடலும் நிறம் கட்டளையிட
வல்லவராய் நல்லவராய்
வந்தார் பாலகனாய்- பிறந்தார்

3. ஆதாம் ஏவாள் மீறுதலால்
ஏதேனிலே சாபம் பிறந்தது
சாபம் நீங்கி வாழ்வுதர
வந்தார் பாலனாய்

பாடல் 33

சில்லென்ற அந்தராவிலே வானில் பாடல் கேட்குதே
தூதர் தந்த விந்தை செய்தி மீட்பர் வந்துதித்தாரே

1.வான் வீதியில் ஓர் வெள்ளியே
பார் எங்கும் நல்ல செய்தியே
பாதை தேடியே வந்த ராயர்கள்
காணிக்கை தனை கொண்டு வந்தனர்
பொன் போளம் தூபமும் சேர்த்து

2.மாதேவனின் அன்பின் எல்லையே
மண்ணில் வந்த சின்ன பிள்ளையே
சாபலோகத்தின் பாவம் போக்கவே
செல்ல பாலனே சிலுவை தூக்கவே
உம்மோடுநான் என்றும் வாழ

3. ஓராயிரம் பாடல்களால்
ஓயாமல் பாடிப் போற்றுவேன்
என்னில் தங்கிடும் இயேசு பாலகா
உம்மைப் போலவே மாற்றும் நாயகா
என்றென்றும் உமக்காய் வாழ

பாடல் 34

பாவம் போக்க வந்த இயேசு பாலா
பாரில் எனைத் தேடி வந்த பாலா
நீரே என் மீட்பர் நீரே என் நேசர்

1.நீரே.. என் ராஜா
நீரே சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கில் பூத்து குலுங்கும்
உள்ளம் கவரும் அழகு லீலி
நேசமும் நீரே – என் பிரியமும் நீரே

2.நீரே… என் ஜீவன்
நீரே… என் பெலன்
வழியும் நீரே ஒளியும் நீரே
வாழ்வும் நீரே வளமும் நீரே
சத்தியமும் நீரே – நித்தியமும் நீரே

3.வந்தேன் உம் பாதம்
தந்தேன் துதிகீதம்
சிந்தை எல்லாம் சுத்தம் செய்யும்
நிந்தை எல்லாம் நீங்க செய்யும்
என்றும் உமக்கே நான் என்றும் உமக்கே

பாடல் 35

அந்த மாட்டுத்தொழுவில்
அதன் முன்னணையிலே
பாவங்கள் சாபங்கள் நீக்கிட
இன்று இயேசு பிறந்தாரே
ஆஹாஹா… ஓஹோஹோ
லாலலா.. யாயாயா

1.வெள்ளை நிற தாடியின் கள்ளமில்லா உள்ளத்தோடு
ஆடிவாராரே கிறிஸ்மஸ் தாத்தா
கைநிறைய பரிசுகள் கைநிறைய இனிப்புகள்
அன்புடனேவாராரே கிறிஸ்மஸ் தாத்தா
சின்ன சின்ன குழந்தைகளின் கும்மாளம்
வண்ண வண்ண கோலத்தில் ஒய்யாரம் – அந்த

2.வானவேந்தன் மகிழ்ந்திட அன்னை மடியில் தூங்கிட
ஓடி வாராயோ வெண்ணிலவே
கானம் பாடும் தூதரின் காதுக்கினிய ராகங்கள்
சுமந்து வாராயோ தென்றலே
பாடுபாடு சோலைக்குயில் கூட்டமே
ஆடு ஆடு வண்ணமயில் கூட்டமே – அந்த

3.வல்லவரே நல்லவரே என் அருமை ரட்சகரே
தந்தேன் என்னை அர்ப்பணம்
என்னைத்தேடிவந்தவரே என்னை மீட்டுக்கொண்டவரே
தந்தேன் என்னை சமர்ப்பணம்
வானம் பூமி படைத்தவரைப் பாடுவேன்
விண்ணும் மண்ணும் அதிர்ந்திடவே பாடுவேன் – அந்த

பாடல் 36

பூபாளம் புகழாரமும் பூமாலையே தாலாட்டிட
கனிவான கானம் காதோரம் பாய
கண்மணியே பொன்மணியே தூங்கு

1. மானே எஜமானே
தேனே தேடி வந்தேனே
மைந்தனே விண்மைந்தனே
தந்தேனே எனைத்தந்தேனே

2. பாலா இயேசு பாலா
பாரில் வந்ததன்பாலா
இத்தனை பாசம் என்பாலா
ஈடென்ன செய்வேன் தூய பாலா


பாடல் 37

கிறிஸ்துமஸ் வந்தது Carol மலர்ந்தது
மனதினை மயக்கிடும் ராகங்கள்
மதுரமாய் இனித்திடும் பாடல்கள்
மழையாய் பொழியும்-தேன்-2

இரட்சகர் பிறந்துவிட்டார்- இயேசு

1.சின்னஞ்சிறு மழலையர் கூட்டம் பாடி மகிழுதே
சிங்காரகன்னியர் கூட்டம் ஆடி மகிழுதே
மத்தாப்பு சிந்தும் வண்ணக் கோலத்தில்
வானம் சிறிக்குதே
மன்னன் இயேசுவின் வரவினாலே
இந்த பூமி மகிழுதே
லா லா… வாருங்கள் வாருங்கள்
கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்

2.புத்தம் புது உலகம் காண்பது தேவனின் சித்தமே
புனிதமாய் பூமியை மாற்றுவது தேவனின் திட்டம்
பாவம் நிறைந்த இந்த பூமி மாந்தரில்
பாசம் கொண்டாரே
பாலன் தன் ஏகமைந்தனை பாரில் தந்தாரே
லா… ல… வாருங்கள் வாருங்கள்
கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்

3.

பாடல் 39

அழகிய வானில் அதிசய ராகம்
ஆர்ப்பரிப்போடே தூதரின் கூட்டம்
அவர் பாட்டினிலே ஓர் அதிசயம்
அதில் தெரிந்திடுதே புது ரகசியம்
உலகில் வந்தார் மேசியா

1.என்ன என்ன புதுமை – விண்ணில்
கேட்ட செய்தி இனிமை
சின்ன இயேசு பாலன் – மண்ணில்
வந்ததாலே மகிமை
கந்தை கோலத்திலே – பசும்
புல்லணை மஞ்சத்திலே
விந்தை பாலனை கண்டு
மந்தை மேய்ப்பரும் மகிழ்ந்தனரே
பாவம் போக்குவோனே – விண்ணில்

2.பாசம் தந்திட்டோனே
சாபம் நீக்குவோனே – சாத்தான்
சேனை வீழ்த்துவோனே
மானே எஜமானே – என்
மணியே கண்மணியே
மன்னவனே உன் அன்பினை படி
வாழ்வெல்லாம் மகிழ்வேனே

பாடல் 40

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
தாளம் போடுது தாலாட்டுப் பாடுது
தேவ ஆட்டு குட்டி அதை பார்த்து ரசிக்குது
ராஜாதி ராஜனிவர் தேவாதி தேவனிவர்

1.வானதூதர் பாடிட
கான மேய்ப்பர் ஆடிட
சின்ன பாலகன் பார்த்து ரசித்தார்

2.தூரதேச ராயர்கள்
தூபம் பொன்போளம் படைத்திட
சின்ன பாலகன் பார்த்து ரசித்தார்

3. கள்ளமில்லா உள்ளம் காணிக்கையாக தருவேனே
சின்ன பாலகன் பார்த்து ரசித்தார்

பாடல் 41

பனி விழும் இரவினிலே பெத்தலை நகரினிலே
பாவங்கள் போக்கிடவே பரிசுத்தர் இயேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பாரில் இயேசு இன்று பிறந்தார்

1. ராக்காலம் மந்தை காத்த மேய்ப்பர்கள்
ராகங்கள் வானத்திலே கேட்டார்.
தாவீதின் ஊரில் மாட்டுத் தொழுவில்
பாவியின் நேசர் இயேசு பிறந்தார்
தூதர் பாடும் பாடல் கேட்ட
ஆயர் உள்ளம் மகிழ்ந்தார்

2.கந்தை கோலத்தில் இயேசு பாலன்
கன்னிமரியின் மடியிலே தவழ்ந்தார்
கண்ணாரக் கண்டு ஆயர் துதித்தார்
கவிபாடி பாலனைப் புகழ்ந்தார்
அதிசயித்தார் ஆனந்ததித்தார்
ஆர்த்து ஆரவாரித்தார்

3.என் பாவம் நீக்க இவர் பிறந்தார்
எனக்காக ஜீவன் தர பிறந்தார்
என் உள்ளம் இவருக்கே சொந்தம் –
என் எல்லாம் இவரிலே தஞ்சம்
எதுவும் வேண்டாம் இப்பூமியிலே
இயேசு ஒருவர் போதுமே

கண் சிமிட்டும் வெள்ளி
மனிதரின் பயத்தை தள்ளி
சாஸ்திரிக்கு ஒரு செய்தி – 2
மன்னன் பிறந்தார் மன்னன் பிறந்தார்
மனுக்குலத்தின் துயர் போக்க
பாலன் பிறந்தார் பாலன் பிறந்தார்

1. காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
மனித உறவுகள்
சிதைந்த உறவை சிறக்க வைக்க
பிறந்தார் இயேசு தான் – 2

2. மார்கழி மாதம் மாடடைக் குடிலில்
தாழ்மையாய் பிறந்தார்
விண்ணைத் துறந்து தாழ்மையாகி
சரித்திரம் படைத்தார் – 2

3.வார்த்தை ஒன்று மனிதனாய் உருவம்
எடுத்த நல்ல நாள்
தொழுவம் ஒன்று தொழுகை பெற்ற
இனிய திருநாள்

பாடல் 43

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்
இயேசு என்னை தேடி வந்ததால்
தாளம் போடுவேன் கைத்தாளம் போடுவேன்
இயேசு எந்தன் உள்ளம் பிறந்ததால்

விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலன் கேட்டிட
நானும் பாடுவேன் மகிழ்ந்தாடிப்பாடுவேன்
ஆனந்த பாட்டு இது சந்தோஷ பாட்டு
ஆனந்த பாட்டு இது இரட்சிப்பின் பாட்டு

1.கடலலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்துச் சொல்லிடுதே
கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுதே
கானமயிலும் சோலைக்குயில்
ராகங்களை சேர்த்திட
துள்ளி ஓடிடும் புள்ளிமான் கூட்டமும்
தாளங்களை தந்திட – நிநிச

2. யார் இவர் யாரோ இவர் மகிமையின் ராஜன்
யார் இவர் யாரோ இவர் மகத்துவ தேவன்
துதிகள் மத்தியில் வாசம் செய்திடும் தேவகுமாரனிவர்
தூதரும் தூயரும் போற்றிப்பாடிடும் துதிகளின் பாத்திரர்

—-

பாடல் 44
வான தூதர் கூட்டம் ஒரு செய்தி சொல்லவே
கான மேய்ப்பர் கேட்டு விந்தை காண சென்றாரே

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
உன்னதத்தில் ஓசன்னா
விண்ணில் மகிமை மண்ணில் மாட்சி
எந்தன் வாழ்வு உம் சாட்சி

1.நாயகன் வரவைச் சொல்ல
நானிலம் மகிழ்ந்தது
நம்மையும் தம்மைப்போல் மாற்றிட
நன்மகன் நம்மிலே உதித்தார்

2.நெஞ்சில் இருளை நீக்க
நெருங்கி வந்தாரே
அக்கறை கொண்டு எந்தன்
அகமதின் கறையினைத் துடைத்தார்

3.அன்று திறந்த கதவு
இன்றும் திறந்ததாய்
மண்ணோர் விண்ணில் வாழ
வல்லவர் வழியாக வந்தார்

பாடல் 45

தென்றல் காற்றே வா வா – என்
கேள்விக்கு பதில் சொல்ல வா வா
வான தூதர்கள் பாடும் பாடலின்
செய்தி என்னவென்று சொல்லு
வான வேந்தன் இந்த உலகில் வந்ததின்
நோக்கம் என்னவென்று சொல்லு

1. மானிடர் பாவம் நீக்கிட –
மனுக்குலம் பரிசுத்தமாகிட
மாட்டுத் தொழுவிலே மரியன்னை
மடியிலே மேசியா பிறந்தார்
ஆடுங்கள் பாடுங்கள் கொண்டாடுங்கள்
ஆனந்தம் பாடியே போற்றுங்கள்

2. சாத்தானின் சேனை வீழ்த்திட
சர்ப்பத்தின் தலையை நசுக்கிட
சாவை வென்றிட ஜீவன் தந்திட வல்லவர் பிறந்தார்
ஆடுங்கள்… போற்றுங்கள்

3.சந்தோஷம் சமாதானம் பெருகிட
சத்தியம் என்றும் நிலைத்திட
சாந்த ரூபமாய் சுந்தர பால்னாய் ரட்சகர் பிறந்தார்
ஆடுகள் … போற்றுங்கள்

பாடல் 46
மலரே மலரே தேன் கொண்டு வா
மகிபன் மகிழ்ந்து கண்தரங்க வா

நிலவே நிலவே விரைந்தோடி வா
நிமலன் மகிழ்ந்து கண் தூங்க வா – ஆரிரோ
1.
இதமான கீதம் சுகமான ராகம்
தூதர்கள் பாடிடவே
மேகங்கள் நடுவினிலே மிதந்து
வருங் ராகங்களை
தென்றலே சேர்த்திங்கு வா – மலரே
2.
அசைந்தாடும் மயில்
கவி பாடும் குயிலே
இசையோடு தாலாட்டுங்கள்
அலை அலையாய் கூடிடுங்கள்
ஆர்ப்பரித்து மானிடரே
ஆனந்தம் பாடிடுங்கள் – மலரே

பாடல் 47

Once upon a Time அந்த பியூட்டி வானிலே
ஏஞ்சல் கூட்டம் பாடி
ஒரு Message சொன்னாங்க

1.ஹலோ ஹலோ மேய்ப்பரே பயப்படாதீங்க
ஹேப்பியான செய்தி ஒண்ணு சொல்றோம் கேளுங்க
பாவம் போக்க ரட்சகர் சத்திரத்தின் முன்னணையில்
பாலனாகப் பிறந்தாரே Go & see

2.இயேசு பிறந்த நல்ல செய்தி மேய்ப்பருக்கே First
பெத்தலை நோக்கி விரைந்தாலே பயணம் Super fast
மேசியாவை கண்டிட மேளதாளம் முழங்கிட
ஆட்டம் பாட்டம் எல்லாமே Best Best

3.Just a minute மானிடரே சின்ன ஒரு request
Jesus இல்லா உலக வாழ்வு எல்லாமே upset
இயேசு உன்னில் இல்லாவிட்டால்
நோக்கமெல்லாம் waste
இயேசு வந்தால் உந்தன் வாழ்வு taste taste

—-
பாடல் 48

சத்திரத்தின் முன்னணையில் சின்ன பாலகன்
இத்தரையை மீட்க வந்த
இயேசு பாலகன்
அன்னைமரி மடியில் பிறந்தார் – அவர்
அன்பின் வடிவாகவே தவழ்ந்தார்
நினைந்து நினைந்து நிதம் பாடுவேனே – சத்திரத்தின்

1. ஆனந்தமாய் வானத்திலே
ஆடிச் செல்லும் விண்மீனே
அதிசயமே அற்புதமே
நீ பயணம் போவதெங்கே
பெத்தலையின் சத்திரத்தின் அருகில்
புது ஒளியை சிந்திடும் உந்தன் அழகில்
மகிபன் பிறந்த செய்தி அறிந்தனரே
மகிழ்ந்து பணிந்து துதி சாற்றினரே – ஓ – சத்திரத்தின்

2.மன்னவனே விண்ணவனே இந்த
உலகில் வந்ததும் ஏனோ
என்னுயிரை மீட்டிடவே இந்த ஏழைக்கோலம் ஏனோ
புல்லணையில் துயில்வது சுகமோ – இந்த
பூவுலகை இரட்சிப்பது மகிழ்வோ
பாவங்கள் சாபங்கள் நீக்க வந்தவரே
பாடி பாடி உம்மை போற்றிடுவேனே – சத்திரத்தின்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks