சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்,
தோன்றும் ஒலிவடி வாரம்,-போக
வேண்டும் அரைமைல் தூரம்,-நடு
ராவினில்பதி னோரொருவரோடு
ஏகினார் கெத்செ மேனே நோக்கியே,
நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே
வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ
ரைத்துணை கொண்டாரந் நேரம்.

2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில்
நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர்
கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும்
சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே,
சக்தி முற்றிலும் அற்றுப்போகவே,
சாடினார் முகம் குப்புறத்தூளிலே
சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து
தேற்றினான் அங்கொரு தூதன்.

3. சொல்லாலே உல கங்கள் படைத்தவன்
சோர்கின்ற வாதையைப் பாரும்!-திகில்
துக்கம் வியாகுலச் சீரும்!-அன்று
பேய்க்கணங்களும் ஓடிடக் கடல்
கோஷ்டமுற்றிலு மாறிடப், புகழ்
பெற்றவன் கொடும் வாதைக்குள்ளாவதின்
காரணமென்ன சொல் வீரே!-அவர்
பேரில் விஸ்வாசம் வைப் பீரே.

4. அப்பா, என்னரு மைப்பிதாவே! உன்றன்
சித்தமே என் முழுப் பாக்யம்;-அதே
நித்தமும் என் தியான வாக்யம்;-திரள்
அந்தகாரமும் மாந்தர் பாவமும்
நிந்தையாகவே வந்துமோதினும்
கொஞ்சமும் மனம் மாறுவேனோ? இங்கே
வந்ததினால் என்ன லாபம்?-நரர்
எந்தவிதம் தீர்ப்பார் பாவம்?

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks