சபையே இன்று வானத்தை – Sabaiyae Indru Vaanathai
1.சபையே, இன்று வானத்தை
திறந்து தமது
சுதனைத் தந்த கர்த்தரை
துதித்துக் கொண்டிரு.
2.பிதாவுக்கொத்த இவரே
குழந்தை ஆயினார்;
திக்கற்று முன்னணையிலே
ஏழையாய்க் கிடந்தார்.
3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலே
உண்டாக ஆண்டவர்
நரரின் சுபாவமாய் இங்கே
வந்து பிறந்தனர்.
4.சிறியோராக ஆண்டவர்
பலத்தை மாற்றினார்;
பண்செய்வன் ரூபைச் சிஷ்டிகர்
தாமே எடுக்கிறார்.
5.அவர் புவியில் பரம
இராஜ்ஜியத்தையே
உண்டாக்க வந்தோராகிய
தாவீதின் மைந்தனே.
6.தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;
இதென்ன அற்புதம்
இதுன்ன சிநேகம் ஆம்;
அன்பதின் பூரணம்.
7.திரும்பப் பரதீசுக்கு
வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று
மகிழ்ந்து பாடுவோம்.
1.Sabaiyae Indru Vaanathai
Thiranthu Thamathu
Suthanai Thantha Karththarai
Thuthithu Kondiru
2.Pithavukoththa Evarae
Kulanthai Aayinaar
Thikkattru Munnanaiyilae
Yealaiyaai Kidanthaar
3.Deiveega Swabam Nammilae
Undaaga Aandavar
Nararin Saayalaai Engae
Vanthu Piranthanar
4.Siriyoraaka Aandavar
Balaththai Mattrinaar
pan seivan Roobai Shistikar
Thaamae Edukkiraar
5.Avar Puviyil Parama
Raajiyaththaiyae
Undakka Vanthorakiya
Thaaveethin Mainthanae
6.Thaazhnthaar Avar Uyarnthom Naam
Ithenna Arputham
Ithunna Sineham Aam
Anbathin Pooranam
7.Thirumba Paraseesukku
Vazhi Thiranthupom
Kearubeen Kaaval Neeginttru
Magilnthu Paaduvom