ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே – நமக்கு
ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே
இயேசு கிருஸ்துவின் இரத்தமே – என்றும்
ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே
ஜெயம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிருஸ்துவின் இரத்தம் ஜெயம்
1. கிருபாதர பலியாய் வந்த
கிருஸ்து இயேசுவின் இரத்தம் ஜெயம்
கோப ஆக்கினைக்கு நீங்களாகி
விடுவித்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
2. தூரம் போன என்னை அழைத்து
சேர்த்து கொண்ட இரத்தம் ஜெயம்
பாவமெல்லாம் கழுவி மீட்டு
பரிசுத்தமாக்கின இரத்தம் ஜெயம்
3. பழுதற்ற பலியாய் ஒப்பு கொடுத்த
பரிசுத்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய
சுத்திகரித்த இரத்தம் ஜெயம்