Ratchakar Yesu – இரட்சகர் இயேசு
இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு
இன்ப நாமம் இயேசு
ஆவியின் நிறைவு ஆராதிக்க!
வசனத்தின் நிறைவு வல்லமைக்கே!
கிருபையின் நிறைவு வாழ்வதற்கே!
இரட்சிப்பின் நிறைவு கீதம் பாட!
கீதங்கள் பாடுவேன்!
இரட்சிப்பின் கீதங்கள்
1.இயேசு சொல்வது நடக்கும்
இயேசு செய்வது வாய்க்கும்
இயேசுவின் கரமே ஓங்கும்
இயேசுவின் மீட்பு எங்கும் – இரட்சகர்
2. இயேசு சென்ற பாதை
நெய்யாய்ப் பொழியும் வாழ்வே
இயேசு தந்த வாழ்வே
எனக்கு என்றும் சொந்தம் – இரட்சகர்
3.இயேசு நாமம் இன்பம்
இனிமை ஊற்று பொங்கும்
இயேசுவின் வாக்கு உண்மை
இன்னல் நீக்கி நிற்கும் – இரட்சகர்
4.இயேசு எழும்பும் காலம்
எழுப்புதல் பரவும் நேரம்
வானவர் தந்த மேகம்
மழையாய் இன்று பொழியும் – இரட்சகர்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam