Perum_Mazhai | பெரும் மழையாய்
பெரும் மழையாய் வாரும்
பெரும் காற்றாய் வீசும்
பெருவெள்ள சத்தம்
எங்கும் கேட்கிறதே – 2
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அபிஷேகத்தால் என்னை நிரப்புமே
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அனல் மூட்டி எரியச் செய்யுமே
எலியாவின் தேவனே
எங்களின் தேவனே
எழுப்புதல் தேசத்தில்
என் கண்கள் காணுமே
பாகாலின் பலிபீடம்
உடைத்தெரிய வேண்டுமே
பரலோக அக்கினி
பற்றி எரிய வேண்டுமே
மோசேயின் தேவனே
எங்களின் தேவனே
முகமுகமாகவே
உமைப் பார்க்க வேண்டுமே
மேகஸ்தம்பமாய்
அக்கினி ஸ்தம்பமாய்
கால்களுக்கு தீபமாய் பாதை
காட்டும் வெளிச்சமாய்
யோசுவாவின் தேவனே
எங்களின் தேவனே
எக்காளம் முழங்கிட
எரிகோவும் வீழ்ந்ததே
யோர்தானை கடந்திட்டோம்
கானானை அடைந்திட்டோம்
கன்மலையின் தேவனே கண்மணிப்போல் காத்தீரே