பல்லவி
பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய
பாக்கியம் மிகப் பெருகுமே.
அனுபல்லவி
பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச்
சிரத்திலே அணிய, யேசு
தேவனைப் பணிந்து போற்றுவோம். – பரத்
சரணங்கள்
1. வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும்
மனத்துயர், இரவு சாபம் இல்லை;
அருணன், மதி வேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும்
அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை;
சருவ மகிமை யுடைய தந்தை
பரனொடு கிறிஸ்தின் திரு
அருள் மிகச் சிறந்த ஒளி
தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே – பரத்
2. ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து,-வஸ்திரங்கள் தமை
அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து,
வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து,-கண்ணீர் அறவே
மகிமையின் கரத்தினால் துடைத்து,
கூட்டி ஜீவ புனலிடத்தில்
கொண்டு மேய்த் தருள் முடியைச்
சூட்டியே அனந்த பாக்கிய
சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார். – பரத்
3. பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம்;-பேர் ஒளி துலங்கும்
பரம கிருபாசனத்தைச் சூழலாம்;
சங்கை யோ டரசிருந்தே ஆளலாம்;-பராபரன் தன்
சமூக ப்ரபைதனிலே வாழலாம்;
மங்கை சீயோன் மகளின் பிரிய
மன்னவன் தேவாட்டுக் குட்டியின்
இங்கிதக் கல்யாணப் பந்தியின்
இருந்து நித்ய விருந்தால் மகிழலாம். – பரத்